மோடிதான் கேப்டன்.. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு பேசிய ஜெய்சங்கர்
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடியை கேப்டன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி: ராய்சினா பேச்சுவார்த்தையில் இன்று கலந்துரையாடிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு விளக்கினார். மேலும் பிரதமர் மோடியை கேப்டன் என்றும், கிரிக்கெட்டை போலவே உள்நாட்டில் மட்டும் வெற்றி பெற விரும்பவில்லை... வெளிநாட்டிலும் வெற்றி பெற விரும்புகிறோம் என்றும் கூறினார்.
வெளியுறவு அமைச்சகம் மற்றும் தி அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து ராய்சினா பேச்சுவார்த்தை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
டெல்லியில் நடத்தப்படும் ராய்சினா கலந்துரையாடலில் தொழில் அதிபர்கள், ராணுவ தளபதிகள், சர்வதேச செய்தியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த ராய்சினா கலந்துரையாடல் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

கிரிக்கெட்டுடன் ஒப்புமைப்படுத்தி விளக்கம்
ஜனநாயகம், பாதுகாப்பு, இறையாண்மை, பூகோளவியல், பாஸ்போர்ட் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் விவாதங்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சமூக வலைத்தளங்கள் மூலம் லட்சக்கணக்கானோர் பார்வையிடவும் ஏற்பாடு செய்யபப்ட்டு இருந்தது. ராய்சினா பேச்சுவார்த்தையில் இன்று கலந்துரையாடிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை கிரிக்கெட்டுடன் ஒப்புமைப்படுத்தி விளக்கினார்.

வெளிநாட்டிலும் வெற்றி பெற
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், "கேப்டன் மோடியுடன் வலைப்பயிற்சி காலை 6 மணிக்கு தொடங்கி நீண்ட நேரம் செல்லும். கேப்டன் மோடி தனது பந்து வீச்சாளர்களுக்கு குறிப்பிட்ட அளவுக்கு சுதந்திரம் கொடுக்கிறார். உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். உலகம் மிகவும் கடினமான கட்டத்தில் இருப்பதால் வெளியுறவுக்கொள்கை மீது அதிக மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தியாவின் உலகமயமாக்கல் இரண்டாவது காரணம் ஆகும். கிரிக்கெட்டை போலவே உள்நாட்டில் மட்டும் வெற்றி பெற விரும்பவில்லை... வெளிநாட்டிலும் வெற்றி பெற விரும்புகிறோம்" என்றார்.

எவ்வாறு புரிந்து கொள்வது
இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து பிரதமர் முன்னாள் டோனி பிளேர் கலந்து கொண்டார். டோனி பிளேர் பேசும் போது, மாறி வரும் புவிசார் அரசியல் சூழலில் இந்தியாவின் நிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மாறி வரும் புவிசார் அரசியலை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதுதான் இன்றைய உண்மையான சவாலாகும். இந்த இடத்தில் இந்தியா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமானதாக..
ஏனெனில், கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமானதாக உள்ளது. இந்தியாவின் நிலை என்பது இதுவரை இல்லாத வகையில், மிகவும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக இல்லை என்பது என நினைப்பது அபத்தமானது. பிற நாடுகளுக்கும் இதை நீங்கள் கூறலாம். மேற்கத்திய நாடுகளுக்கு அதிகாரத்தை பகிர்வதை வேறு வழி இல்லை. புதிய உலகில் ராஜ்யரீதியில் எப்படி அணுகுவது என்பதுதான் கேள்வியாக உள்ளது" என்றார்.
-
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications