Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலக தலைவர்கள் இந்தியாவில் குவியப்போறாங்க.. ஜி20 மாநாட்டுக்கு நாங்க ரெடி! மோடி ஹேப்பியா சொன்ன நியூஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜி 20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டுக்கு இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியதாவது, "செப்டம்பர் மாதம், நாட்டின் திறமைக்கு சாட்சியாக இருக்கிறது. அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜி20 தலைவர்கள் மாநாட்டிற்காக இந்தியா முழுத் தயார் நிலையில் இருக்கிறது. இந்த ஏற்பாட்டில் பங்கெடுக்க 40 நாடுகளின் தலைவர்களும், பல உலக நிறுவனங்களும் தலைநகர் டெல்லிக்கு வருகிறார்கள்.

Modi said that India is ready for G 20 Summit to be held in September

தனது தலைமைத்துவத்தின் வாயிலாக இந்தியா ஜி 20 யை, மேலும் அதிகம் உள்ளடக்கிய அமைப்பாக ஆக்கியிருக்கிறது. இந்தியாவின் அழைப்பின் பேரில், ஆப்பிரிக்கக் கூட்டமைப்பும் கூட ஜி 20யோடு இணைந்து இருக்கும் நிலையில், ஆப்பிரிக்க மக்களின் குரல், உலகின் இந்த முக்கியமான மேடை வரை எட்டியிருக்கிறது.

நண்பர்களே, கடந்த ஆண்டு, பாலியில் இந்தியா ஜி20யின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு, இதுவரை இவ்வளவு விசயங்கள் நடந்திருக்கிறது என்பது நம் அனைவருக்கும் பெருமையளிக்கிறது. டெல்லியில் மட்டுமே பெரியபெரிய நிகழ்ச்சிகளை நடத்துவது என்ற பாரம்பரியத்திலிருந்து விலகி, நாங்கள் இதை தேசத்தின் பல்வேறு நகரங்களுக்கும் கொண்டு சென்றோம்.

தேசத்தின் 60 நகரங்களில் இதோடு இணைந்த கிட்டத்தட்ட 200 கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜி20 பிரதிநிதிகள் எங்கெல்லாம் சென்றார்களோ, அங்கெல்லாம் மிகவும் பிரியத்தோடு அவர்களுக்கு வரவேற்பு நல்கப்பட்டது. இந்தப் பிரதிநிதிகள் நமது தேசத்தின் பன்முகத்தன்மையைக் கண்டு, நமது துடிப்பு நிறைந்த ஜனநாயகத்தைப் பார்த்து, மிகவும் நல்ல உணர்வை அனுபவித்தார்கள்.

இந்தியாவி எத்தனை சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். நண்பர்களே, ஜி20யின் நமது தலைமைத்துவம், மக்களின் தலைமைத்துவம், இதில் மக்களின் பங்களிப்பு உணர்வு மிக முதன்மையானது. ஜி20யின் 11 ஈடுபாட்டுக் குழுக்களில் கல்வியாளர்கள், குடிமை சமூகத்தவர்கள், இளைஞர்கள், பெண்கள், நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழில்முனைவோர் மற்றும் நகர்ப்புற நிர்வாகத்தோடு இணைந்தவர்கள் முக்கியமான பங்களிப்பு அளித்தார்கள்.

இதனை முன்னிட்டு நாடெங்கிலும் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளோடு, ஏதோ ஒரு வகையில் ஒண்ணரை கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இணைந்திருக்கிறார்கள். மக்களின் பங்களிப்பு தொடர்பான நமது இந்த முயற்சியில் ஒன்றல்ல, இரண்டு உலக சாதனைகள் படைக்கப்பட்டிருக்கின்றன.

வாரணாசியில் நடைபெற்ற ஜி20 வினாடி வினா போட்டியில் 800 பள்ளிகளிலிருந்து ஒண்ணே கால் இலட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு அதனை உலகச் சாதனையாக்கி இருக்கிறார்கள். அதே வேளையில், லம்பானி கைவினைஞர்களும் கூட அற்புதம் ஒன்றை நிகழ்த்தியிருக்கின்றார்கள்.

450 கைவினைஞர்கள், சுமார் 1800 தனித்துவம் வாய்ந்த அலங்காரங்களின் ஆச்சரியமான தொகுப்பை உருவாக்கி, தங்களுடைய திறத்தினை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஜி20க்கு வந்த அனைத்துப் பிரதிநிதிகளும் நமது தேசத்தின் கலைத்துறையின் பன்முகத்தன்மையைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

இதே போன்றதொரு அற்புதமான நிகழ்ச்சிக்கு சூரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கே நடைபெற்ற புடவை உடுத்திய பெண்களின் நீண்டதூர நடைப்பயணத்தில் 15 மாநிலங்களைச் சேர்ந்த 15,000 பெண்கள் பங்கெடுத்தார்கள். இந்த நிகழ்ச்சி காரணமாக, சூரத்தின் ஜவுளித் தொழிலுக்கு ஊக்கம் கிடைத்த அதே நேரத்தில், உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற கருத்திற்கும் வலு கிடைத்தது.

உள்ளூர் பொருட்கள், உலக அளவுக்குக் கொண்டு செல்லப்படும் வழியும் ஏற்பட்டிருக்கிறது. ஸ்ரீநகரில் ஜி 20யின் கூட்டத்திற்குப் பிறகு கஷ்மீரிலே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகிறது. நாட்டு மக்கள் அனைவரிடமும் நான் வேண்டிக் கொள்வதெல்லாம், வாருங்கள், ஜி20 சம்மேளனத்தை வெற்றி பெறச் செய்வோம், தேசத்தின் பெருமையை நிலைநிறுத்துவோம்." என்று தெரிவித்து உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+