டெல்லியில் 100 பள்ளிகள் மூடல்.. இ-மெயில் வெடிகுண்டு மிரட்டலால் பாதியில் வீட்டுக்கு சென்ற மாணவர்கள்
டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் நொய்டா மற்றும் டெல்லியில் உள்ள 100 பள்ளிகளுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் பாதியில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சமீபகாலமாக பள்ளிகளுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பெங்களூர் மற்றும் சென்னையில் உள்ள ஏராளமான பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தான் இன்று டெல்லி மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது டெல்லியில் உள்ள 100 பள்ளிகள் மற்றும் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள பள்ளிகளுக்கும் இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. காலை 6 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்ட இ-மெயிலை பள்ளி தொடங்கியபோது ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். பள்ளி முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெடிகுண்டு உள்பட வெடிக்கும் தன்மையுடைய எந்த பொருட்களும் சிக்கவில்லை. இதன்மூலம் இ-மெயிலில் வந்த மிரட்டல் என்பது வெறும் வெடிகுண்டு புரளி என்பது தெரியவந்தது.
அதேபோல் நொய்டாவில் உள்ள பள்ளிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கும் வெடிகுண்டு இல்லை. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதாவது இமெயில் வந்த ஐபி முகவரியை வைத்து விசாரணையை தொடங்கி உள்ளன. மேலும் இந்தியாவுக்கு வெளியே உள்ள பகுதியில் அதாவது வெளிநாட்டில் இருந்தபடி மிரட்டல் மெயில் அனுப்பி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுபற்றி டெல்லி போலீசார் கூறுகையில், ‛‛திவார்கா, வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளி, கிழக்கு மயூர் விஹாரில் உள்ள அனை் மேரி பள்ளி, சமஸ்கிருத பள்ளி, புஷ்ப் விகாரில் உள்ள அமிட்டி பள்ளி, தென்மேற்கு டெல்லியில் உள்ள டிஏபி பள்ளி உள்பட பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நொய்டாவில் உள்ள பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது. மிரட்டல் விடுத்த நபரை தேடிவருகிறோம்'' என்றனர்.
இந்த சம்பவம் இன்று டெல்லி மற்றும் நொய்டாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக பாதுகாப்ப கருதி மாணவ-மாணவிகள் உடனடியாக 100 பள்ளிகளில் இருந்து தங்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications