தோல்வியை மோடி உணர்ந்துவிட்டார்.. அதனால்தான் இப்படி பேசுகிறார்.. யார் சொல்லி இருக்காருன்னு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடி லோக்சபா தேர்தலில் டெல்லியை உணர்ந்துவிட்ட காரணத்தால்தான் திடீரென மதவாதத்தை கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

நாடு முழுக்க முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் பல்வேறு மாநிலங்களிலும் வரும் 26ம் தேதி நடக்கும் நிலையில், ராஜஸ்தானிலும் தேர்தல் நடக்க உள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் நேரடியாக மோதும் மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. அங்கிருந்து மொத்தம் 25 எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்குத் தேர்வாவார்கள்.

MP Jothimani replies to PM Modi speech on Muslims stand and Congress in India

மோடி பேச்சு: இதனால் அங்கு தீவிரமான பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் ராஜஸ்தானில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசியது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள்.

இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. "அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது,​​தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.

எழுந்த சர்ச்சை: இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா. இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள்.

பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தை கூட விட்டுவைக்காது, என்று பிரதமர் மோடி கடுமையாக பேசி இருக்கிறார்.

ஜோதிமணி விமர்சனம்: பிரதமர் மோடியின் இந்த பேச்சு கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது. இதை காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். அதில்,

ரேந்திர மோடி தோல்வியை தெளிவாக உணர்கிறார். ராகுல் காந்தி மக்களின் இதயங்களில் அன்பின் விதைகளை விதைத்துள்ளார் என்பதை அவர் புரிந்து கொள்ள தொடங்கிவிட்டார். எந்த வெறுப்பாலும் இப்போது மோடியின் அரசைக் காப்பாற்ற முடியாது. பை பை மோடி ஜி!., என்று ஜோதிமணி விமர்சனம் செய்துள்ளார்.

திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் அண்ணாதுரை இதை பற்றி செய்துள்ள போஸ்டில், தோல்வி பயத்தில் மோடி அவர்கள் பிதற்ற ஆரம்பித்துவிட்டார். இஸ்லாமியர்களை கேவலம் ஓட்டுக்காக இப்படி பேசலாமா? நெஞ்சம் பதைபதைக்கிறது! என்று குறிப்பிட்டு உள்ளார்.

MP Jothimani replies to PM Modi speech on Muslims stand and Congress in India

இரண்டாம் கட்ட தேர்தல்: நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.

இரண்டாம் கட்ட தேர்தல் பல்வேறு மாநிலங்களிலும் வரும் 26ம் தேதி நடக்கும் நிலையில், ராஜஸ்தானிலும் தேர்தல் நடக்க உள்ளது. இங்கே நடந்த பிரச்சாரத்தில்தான் பிரதமர் மோடி சர்ச்சைக்குரிய வகையில் இப்படி பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+