Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிந்திய பாலை நினைத்து இப்போ அழக்கூடாது.. அமலாக்கத்துறைக்கு முகுல் ரோத்தகி பதில்.. பரபரத்த கோர்ட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிந்திய பாலை நினைத்து இப்போது அழக்கூடாது. 15 நாட்களை நீதிமன்ற காவல் காலமாக எடுத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்கிறீர்கள். ஆனால், அந்த நாட்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்தார். எப்படி இல்லை என்று சொல்ல முடியும் என முகுல் ரோத்தகி பரபர வாதங்களை முன்வைத்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தது. இதையடுத்து விசாரித்த 3வது நீதிபதி செந்தில் பாலாஜியை கைது செய்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனத் தீர்ப்பளித்தார்.

Mukul rohatgi reply to ED tushar mehta on Senthil balaji case hearing in Supreme court

சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை: இதையடுத்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அமலாக்கத்துறை சார்பிலும் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீது ஏற்கெனவே இரு முறை விசாரணை நடந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில் கபில் சிபல் ஆஜராகி வாதம் செய்தார். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடினார்.

இதையடுத்து இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நாளை (அதாவது இன்று) முடிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதங்களை முன்வைத்தார்.

துஷார் மேத்தா பரபர வாதம்: அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும். மருத்துவமனை, நீதிமன்ற காவலில் உள்ளதை விசாரணை காலமாக கருதக் கூடாது. ஊழல், பொதுமக்கள் பணத்தை கையாடல் செய்தல் உள்ளிட்ட புகார்கள் செந்தில் பாலாஜி மீது உள்ளன. தனிப்பட்ட முறையில் செந்தில் பாலாஜியை விசாரிப்பது மிக மிக அவசியம்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலங்களை பெற முயற்சித்தபோது அவர் எந்த ஒத்துழைப்பையும் தரவில்லை. விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால்தான் அவரை கைது செய்தோம். சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விவகாரத்தில் செந்தில் பாலாஜி ஈடுபட்டிருப்பார் என்பதற்கான வலுவான காரணங்கள் உள்ளன.

ஒத்துழைப்பு தரவில்லை: நீதிமன்றக் காவலில் இருக்கும் போது ஒருவரை ஒப்படைக்க ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய முடியாது. வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தவிடாமல் அனைத்து வகையிலும் செந்தில் பாலாஜி தடுத்தார். விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க மறுத்ததால் அவர் அதிகாலை 1.39 மணிக்கு கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளதால் விசாரணைக்கு உட்படுத்த முடியவில்லை. எனவே சுப்ரீம் கோர்ட்டு அவர் மருத்துவமனை மற்றும் நீதிமன்ற காவலில் உள்ள இந்த காலகட்டத்தை முதல் 15 நாட்களாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் எடுத்து விசாரிப்பது அமலாக்கத்துறையின் உரிமை, அதை தடுக்க முடியாது. தற்போது செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் விசாரணை பாதிக்கப்படும். கைதுக்கான காரணங்களை ஏற்கனவே கூறிவிட்டோம். தான் தாக்கப்பட்டதாக செந்தில் பாலாஜி கூறினாலும் உடலில் எந்த காயங்களையும் அவர் நீதிபதியிடம் காட்டவில்லை என வாதங்களை அடுக்கினார்.

காவலில் எடுக்க வேண்டும், எங்கள் கடமை: மேலும், ஒருவரை நீதிமன்ற காவலில் வைப்பது என்பது அந்த நபரை உடல்ரீதியிலான முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதானே தவிர மாறாக மருத்துவமனையிலோ அல்லது சிறையிலோ சென்று விசாரிப்பது கிடையாது என்பதால் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என துஷார் மேத்தா வாதம் வைத்தார்.

ஆனால், தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, முதல் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது. மீண்டும் போலீஸ் காவல் கோர முடியாது என வாதிட்டார். அதற்கு துஷார் மேத்தா, ஒருவரை நாங்கள் கைது செய்கிறோம். அவருக்கு 15 நாட்கள் ரிமாண்ட் தரப்படுகிறது. ஆனால் அந்த நபர் தலைமறைவாகிட்டு 15 நாட்கள் கழித்துவிட்டு எனக்கு ரிமாண்ட் முடிந்துவிட்டது என்றால் எப்படி ஏற்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

அப்போதும் போலீஸ் கட்டுப்பாட்டில் தானே இருந்தார்: முகுல் ரோத்தகி, உடல் ரீதியாக கட்டுப்பாட்டில் வைப்பதற்குத்தான் காவலில் எடுக்கிறோம் என என் நண்பர் துஷார் மேத்தா சொல்கிறார். தடுப்பு மற்றும் கஸ்டடி இரண்டுமே இணையானவை என நீதிமன்றம் கூறியுள்ளது. இரண்டுமே காவல் நிலையம், சிறை, நீதிமன்றம் என எதுவாக இருந்தாலும், சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடு என்று பொருள்படும் என வாதிட்டார். அதற்கு துஷார் மேத்தா, இரண்டும் வெவ்வேறு எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய முகுல் ரோத்தகி, ஜூன் 14ஆம் தேதி நீதிமன்ற காவல் கோரப்பட்டது. ஜூன் 15 அன்று, உயர்நீதிமன்றம் நீதிமன்ற காவலை வழங்கியது. தவறில்லை. அமலாக்கத்துறை விரும்பியது கிடைத்தது. துரதிர்ஷ்டவசமாக, அந்த நபருக்கு பைபாஸ் சர்ஜரி இருந்தது. இது போலீஸ் காவலின் போது நடந்தது. காவலின் போது தான் ஆபரேஷன் நடந்தது. மருத்துவமனையில் அறைக்கு வெளியே ஒரு அதிகாரி நின்று கொண்டிருந்தார். அது சுதந்திரம் பறிக்கப்படும் விஷயம் தானே.

சிந்திய பாலை நினைத்து அழக்கூடாது: அவர் மருத்துவமனையில் இருந்தபோது நீங்கள் போலீஸ் காவலில் வைத்திருந்தீர்கள். அப்போது சிந்திய பாலை நினைத்து இப்போது அழக் கூடாது. அந்த நேரத்தில், எனது கட்சிக்காரர் போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்தார். அவரது சுதந்திரம் குறைக்கப்பட்டது. அதனால், அந்த 15 நாட்களை நீதிமன்றக் காவல் காலமாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்க முடியாது. அதைத்தான் சொல்ல முயல்கிறோம் என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை காரசாரமாக நடந்து முடிந்துள்ளதால், தீர்ப்பு குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+