சிஏஏ, என்ஆர்சி... பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கும் முஸ்லிம் மதகுருமார்கள்
டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், நாட்டின் முக்கிய இஸ்லாமிய மதகுருமார்கள், இஸ்லாமிய அறிஞர்கள் விரைவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.
அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் குடியுரிமைச் சட்டம் மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொழுகையைத் தொடர்ந்து பழைய டெல்லியில் உள்ள ஜமா மஸ்ஜித் பகுதியிலும் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தது.

வன்முறை வேண்டாம்
இதையடுத்து அண்மையில், டெல்லி ஜூம்மா மசூதி தலைமை இமாம் உமர் அகமது இலியாசி, போராட்டக்காரர்கள் வன்முறையிலிருந்து விலகுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அறவழியில் நடத்த
அப்போது பேசிய அவர், அமைதி தொடர வேண்டும் என்று இந்த நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். ஒரு போராட்டத்தை நடத்துவது நம்முடைய ஜனநாயக உரிமை. நாம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், ஆனால் அமைதியான முறையில் தெரிவிக்க வேண்டும்" என்று இலியாசி கூறினார். எனினும் நாடு முழுவதும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக பல போராட்டங்களால் தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது.

முஸ்லிம் மதகுருக்கள்
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அனைத்து இமாம் அமைப்பின் தலைவர் டாக்டர் இமாம் உமர் அகமது இலியாசி, "முஸ்லிம் மதகுருமார்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள், சட்டமியற்றுபவர்கள் மற்றும் மதரசா பாதுகாப்பாளர்கள் அடங்கிய குழு விரைவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும்" என்றார்.

பிரதிநிதிகள்
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்ஆர்சி குறித்த கவலைகள் குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து இந்த பிரதிநிதிகள் பேசுவார்கள் என்று இலியாசி கூறினார். இந்த சந்திப்பு விரைவில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications