சிபிஐ இயக்குநர், சிறப்பு இயக்குநருக்கு கட்டாய விடுப்பு.. இடைக்கால இயக்குநராக நாகேஷ்வர் ராவ்!
டெல்லி: சிபிஐ அமைப்பின், இடைக்கால இயக்குநராக நாகேஷ்வர் ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் நாகேஷ்வர் ராவ் நியமனம் நடைபெற்றுள்ளது.
இதற்கு முன்பாக, சிபிஐ இணை இயக்குநராக பதவி வகித்தவர் நாகேஷ்வர ராவ் ஆகும்.

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.
மொயின் குரோஷி என்ற இறைச்சி ஏற்றுமதியாளருக்கு எதிரான வழக்குகளை ராகேஷ் அஸ்தானா தலைமையிலான குழு விசாரணை செய்து வருகிறது. அந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியாக ஹைராபாத்தை சேர்ந்த சதீஷ் சனா பாபுவை இணைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் இருந்து சனா பாபுவை விடுவிக்க சுமார் ரூ.3 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றதாக ராகேஷ் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
முன்னதாக, அலோக் வர்மா ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியிருப்பதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் அஸ்தானா கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்திருந்தார். தற்போது அதே லஞ்ச குற்றச்சாட்டின்கீழ் அஸ்தானா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ததுள்ளது.
இந்த நிலையில்தான், பிரதமர் மோடி இவ்விஷயததில் தலையிட்டார். மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் நாகேஷ்வர் ராவ் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டதோடு, அலோக் வர்மாவும், ராகேஷ் அஸ்தானாவும் விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications