லோக்சபா தேர்தல்: வாரணாசி தொகுதியில் மீண்டும் நரேந்திர மோடி போட்டியிட வாய்ப்பு!
டெல்லி: வரும் லோக்சபா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தனது வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிடவுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த லோக்சபா தேர்தலில் குஜராத்தில் வதேதரா மற்றும் உத்தரபிரதேசத்தின் வாரணாசி ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் மோடி போட்டியிட்டார்.

இரு தொகுதிகளிலும் மோடி வெற்றி பெற்ற நிலையில், அதில் வதேதரா தொகுதி எம்பி பதவியை பின்னர் அவர் ராஜினாமா செய்துவிட்டு, வாரணாசி தொகுதியை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்.
இந்த நிலையில், வரும் லோக்சபா தேர்தலின்போது மீண்டும் வாரணாசி தொகுதியில் இருந்து மோடி களம் காண உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரப் பிரதேசம் என்பது 80 லோக்சபா தொகுதிகள் கொண்ட பெரிய மாநிலம்.
அங்கு எந்த கட்சி அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுகிறதோ அதற்கு மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே உத்தரபிரதேச மாநிலத்தை மையமாகக் கொண்டு அரசியல் காய் நகர்த்த, மோடி இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட வேண்டும் என்று உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். எனவே பிரியங்கா காந்தியின் முடிவை பொறுத்து, வாரணாசி தொகுதியில் தேர்தல் மேலும் சுவாரசியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications