இனி சுங்கச்சாவடியில் நிற்கவே வேண்டாம்.. வருகிறது மேஜர் மாற்றம்.. வாகன ஓட்டிகளுக்கு குஷி அறிவிப்பு!
டெல்லி: நாடு முழுக்க தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறைகளில் மத்திய அரசு தொடர்ச்சியாகப் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருகிறது. பொதுமக்களின் வசதியை மேம்படுத்தவே இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. இதற்கிடையே போக்குவரத்துத் துறை அமைச்சகம் மீண்டும் ஒரு மேஜர் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இப்போது நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ் சாலைகளில் பயணிக்க நாம் தனியாகச் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு முறையும் கவுண்டரில் நாம் பணம் செலுத்த வேண்டி இருந்தது. ஆனால், பாஸ்டேக் முறை வந்த பிறகு இது மாறியது. சுங்கச்சாவடிகளில் ஏற்படும் டிராபிக் பாதிப்பு கணிசமாகக் குறைந்தது.

மேஜர் மாற்றம்
இதற்கிடையே அடுத்த கட்டமாகச் சுங்கச்சாவடி முறையில் ஒரு முக்கியமான மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது நாட்டில் இருக்கும் முக்கியமான நெடுஞ்சாலைகளில் Multi-Lane Free Flow எனப்படும் தடையற்ற கட்டண வசூல் முறையைச் சாலைப் போக்குவரத்துத் துறை அறிமுகப்படுத்துகிறது. முதற்கட்டமாக இப்போது குஜராத்தில் உள்ள NH-48இல் உள்ள சோரியாசி ஃபீ பிளாசாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து ஹரியானாவில் உள்ள NH-44இல் உள்ள கரௌண்டா ஃபீ பிளாசாவில் அடுத்தகட்டமாக இந்தத் திட்டம் கொண்டு வரப்படும்.
25 சுங்கச்சாவடிகள்
மெல்ல நாடு முழுக்க உள்ள 25 சுங்கச்சாவடிகளில் இந்த முறையைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுங்க வருவாயை மேம்படுத்துவதோடு, விரைவான மற்றும் திறமையான தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க்கை உருவாக்க முடியும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Multi-Lane Free Flow System என்பது சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமல் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஒரு நவீன முறையாகும். இந்த முறையில் உயர் செயல்திறன் கொண்ட RFID ரீடர்கள் மற்றும் ANPR கேமராக்கள் சுங்கச்சாவடிகளில் பொருத்தப்படும். கார்கள் சுங்கச்சாவடிகளில் செல்லும்போது, ஃபாஸ்டேக் மற்றும் வாகனப் பதிவு எண்ணைப் படித்துத் தானாகப் பணம் பிடித்தம் செய்யப்படும்.
பாஸ்டேக்
தற்போது நாடு முழுக்க அனைத்துச் சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டேக் கட்டாயம் என்றாலும், நாம் வாகனத்தைப் போய் நிறுத்த வேண்டும். அதன் பிறகே ரீடர்கள் அதைப் படித்து பரிவர்த்தனைகளை முடிக்கும். ஆனால், இந்த புதிய முறையில் வாகனம் ஓரளவுக்கு மெதுவாக சென்றாலே போதும்.. பணம் தானாக பிடித்தம் செய்யப்படும்.
இந்த முறை அமலுக்கு வரும்போது, சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பயண நேரம் மிச்சமாகும். மேலும், எரிபொருள் சேமிப்பு மற்றும் காற்று மாசு குறைப்பு என ஏகப்பட்ட நன்மைகளும் இதனால் ஏற்படும்.
மிக முக்கிய அறிவிப்பு
நடப்பு நிதியாண்டில் 25 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் MLFF அடிப்படையிலான கட்டண வசூலைத் தொடங்க மத்திய போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "நடப்பு நிதியாண்டில் சுமார் 25 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் MLFF அடிப்படையிலான சுங்க வசூலைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். எந்தச் சுங்கச்சாவடிகளில் எல்லாம் இதைத் தொடங்கலாம் என்பதை அடையாளம் காணும் பணி இப்போது நடைபெற்று வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
குஜராத்தில் உள்ள சோரியாசி சுங்கச்சாவடியில் இந்த முறையில் சுங்க கட்டண வசூல் தொடங்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் லிமிடெட் (IHMCL) மற்றும் ICICI வங்கி இடையே கையெழுத்தானது. இப்போது இந்தியாவில் 63 லட்சம் கி.மீ.க்கும் அதிகமான சாலைகள் உள்ளன. இதில், தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 1,46,342 கி.மீ. ஆகும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications