வட இந்திய மீடியாக்கள் டோன் மாறுதே.. அனல் கக்கிய ராகுல் காந்தி பேச்சு என தலைப்பு!
டெல்லி: பங்குச் சந்தை மோசடி குறித்து இன்று டெல்லியில் ராகுல் காந்தி அளித்த பேட்டியை ஆவேச தலைப்பிட்டு வட இந்திய ஊடகங்கள் ஒளிபரப்பு செய்தன. தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தியின் பேச்சுக்கு பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்காத ஊடகங்கள் தற்போது தனது டோனை மாற்றியுள்ளது கவனம் பெற்றிருக்கிறது.
லோக்சபா தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக தயாராகி வருகிறது. இந்த முறை கூட்டணி ஆட்சியே அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாஜக கூட்டணிக்கு 400 இடங்கள் வரை கிடைக்கும் என்று ஊடகங்கள் கருத்துக்கணிப்பு வெளியிட்டு வந்த நிலையில், தேர்தல் முடிவுகள் பாஜகவை அதிரவைத்தது. பாஜகவிற்கு 240 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 இடங்கள் கிடைத்தன. ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் 400 இடங்கள் வரை பாஜக கூட்டணிக்கு கிடைக்கும் என்று முன்னணி ஊடகங்கள் கூறின. ஆனால் இந்த கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக இந்தியா கூட்டணி பாஜகவிற்கு தண்ணி காட்டியது. இந்தியா கூட்டணி கட்சிகள் 234 இடங்களில் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது. தேசிய அரசியலில் கடந்த 10 ஆண்டுகளாக தனி ராஜாங்கம் நடத்தி வந்த பாஜகவிற்கு இந்த முறை எதிர்பாரத அடி விழுந்துள்ளது. வட இந்திய ஊடகங்களும் பாஜகவை மெச்சியே செய்தி வெளியிட்டு வந்தன. காங்கிரஸ் மற்றும் ராகுலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமலே இருந்த வட இந்திய ஊடகங்கள் தற்பொது டோனை அப்படியே மாற்றியுள்ளன.
ராகுல் காந்தி இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை வைத்து பெரிய முறைகேடு நடைபெற்றதாக கூறி பிரஸ்மீட்டில் மோடி மற்றும் அமித்ஷாவை கடுமையாக சாடியிருந்தார். இந்த பேட்டியை ''அனலை கக்கிய ராகுல்'' என்ற தலைப்புடன் வட இந்திய ஊடகங்கள் ஒளிபரப்பு செய்தன. டெல்லியில் அரசியல் கிளைமேட் மாறியிருக்கும் நிலையில், வட இந்திய ஊடகங்களின் டோனும் மாறியிருப்பது கவனம் பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களும் இது பற்றி அதிகம் காரசாரமாக விவாதித்து வருகிறார்கள்.
முன்னதாக ராகுல் காந்தி இன்று அளித்த பேட்டியில், "தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தொடர்பாக பேட்டி ஒன்றை அளித்தார். அதில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் பங்குச்சந்தைகளில் திட்ட முறைகேடு நடந்திருக்கிறது. இந்த முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை. பங்குச்சந்தையில் முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.
தேர்தல் ரிசல்ட் அன்று முதலீட்டாளர்கள் ரூ.30 லட்சம் கோடியை இழந்துள்ளனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக வெற்றியை மிகைப்படுத்தியது ஏன்? பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும்படி 5 கோடி குடும்பங்களுக்கு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஏன் ஆலோசனைகளை வழங்கினர்? முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவதுதான் அவர்களின் வேலையா?
ரிசல்ட் அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக முதலீடு செய்து 5 கோடி குடும்பங்களை ஏமாற்றி பெரும் லாபம் சம்பாதித்த பாஜகவுக்கும், போலியான கருத்துக் கணிப்பாளர்களுக்கும், சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் என்ன தொடர்பு? இது இதுவரை இல்லாத மிகப் பெரிய பங்குச் சந்தை மோசடி. எனவே இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மேலும், ஜூன் 4ம் தேதிக்கு முன்பு பங்குகளை வாங்கினால், அதன் விலை அடுத்தடுத்த நாட்களில் உயரும் என்று மோடியும், அமித்ஷாவும் அதானிக்கு சொந்தமான என்டிடிவிக்கு பேட்டியளித்திருந்தார்கள். இது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications