டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாஸ்டர் பிளான்.. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா?

Google Oneindia Tamil News

Recommended Video

    Congress Manifesto: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு- வீடியோ

    டெல்லி: தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நாடாளுமன்றத்திற்கு பொறுப்பாளராக்கும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சி சார்பில் லோக்சபா தேர்தலையொட்டி, நேற்று தேர்தல் வாக்குறுதி வெளியிடப்பட்டது. அக்கட்சியின், தேசிய தலைவர் ராகுல் காந்தி இதை வெளியிட்டு பேசும்போது, மக்களிடம் கருத்து கேட்டு ஓராண்டாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்றதாக கூறியிருந்தார்.

    National Security Adviser accountable to Parliament: Congress manifesto

    இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் இருந்தபோதிலும், தேச பாதுகாப்பு தொடர்பாகவும் சில முக்கிய அம்சங்களை பேசியிருந்தது.

    அதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றை பொறுப்புக்குள் கொண்டுவர வேண்டும் என்பதும் ஒன்றாகும். இவ்விரு பதவிகளுக்குமான அதிகாரம் மற்றும் செயல்பாடுகள் சட்டத்தின்கீழ் வரையறுக்கப்படும். நாடாளுமன்றத்திற்கு அவை கட்டுப்பட்டதாக மாற்றப்படும். பாதுகாப்புத்துறைக்கு கூடுதலாக நிதி உதவி செய்யப்படும். தலைமை பாதுகாப்பு அதிகாரி நியமனம் விரைந்து செய்யபபடும்.

    வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதது உண்மைதான்.. முதல் முறையாக போட்டு உடைத்தார் மோடி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதது உண்மைதான்.. முதல் முறையாக போட்டு உடைத்தார் மோடி

    ராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கையை எடுப்போம்.

    தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தை 2015 மற்றும் 2016 வரையிலான காலகட்டத்தில் கேட்பாரற்று விட்டது பாஜக அரசு. அதன்பிறகு, அந்த அமைப்பையை கலைத்துவிட்டது. ஆனாலல் காங்கிரஸ் அந்த அமைப்பை மீண்டும் கொண்டுவரும். சிறப்பான, நிலையான அறிவுரை குழுவாக அது இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The Congress has promised to make the office of the National Security Adviser as well as the National Security Council (NSC), a government advisory agency, accountable to Parliament if voted to office in the upcoming Lok Sabha election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X