28 நாளில் 80 பேரணிகள்.. சித்துவுக்கு தொண்டை போச்சு.. 4 நாட்களுக்கு பேசக் கூடாதாம்!
டெல்லி: கடந்த 28 நாட்களாக 80 பேரணியில் தொடர்ந்து பிரச்சாரம் செய்ததால் நவ்ஜோத் சிங் சித்துவின் குரல்வளை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மிக முக்கியமான நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 6 கட்டங்கள் நடந்து முடிந்த நிலையில் வரும் 19-ஆம் தேதி இறுதி கட்டமாக 7-ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக நவ்ஜோத் சிங் சித்து தற்போது அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் ஏராளமான பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டார்.

28 நாட்களில் 80 பேரணிகள்
கடந்த 28 நாட்களில் அவர் 80-க்கும் மேற்பட்ட பேரணிகளில் பங்கேற்று பேசியுள்ளார். இதனால் அவரது குரல்வளை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவர்கள்
இதுகுறித்து சித்து தரப்பில் கூறுகையில் தொடர் பிரசாரம் காரணமாக சித்துவின் குரல்வளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 நாட்களுக்கு பேசவே கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஸ்டீராய்டு மருந்துகள்
அவரது குரலில் ரத்த போக்கு ஏற்படும் அளவுக்கு பாதிப்புள்ளது. அவரது குரல்வளை மீது மருந்து போடப்பட்டுள்ளது. ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பிரச்சாரம்
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் சிகிச்சை முடிந்து பிரச்சாரத்துக்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போல் கடந்த டிசம்பர் மாதம் 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பிரச்சாரம் செய்தார் சித்து.

17 நாட்களில் 70 கூட்டங்கள்
அப்போது 17 நாட்களில் 70க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டார். இதனால் அவரது குரல் வளை பாதிக்கப்பட்டு ஒரு வாரத்துக்கு ஓய்விலிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications