என்னது கேபினட் அமைச்சர்களா? சுயரூபத்தை இப்பவே காட்டிய பாஜக! கூட்டணி கட்சிகளுக்கு தந்த பதில் இதுதான்!
டெல்லி: மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் எப்படியும் கேபினட் அமைச்சர்கள் பதவியை பெற்றுவிடுவோம் என நம்பி ஆதரவு தருகிற தெலுங்கு தேசம், ஜேடியூ, ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு 'நோஸ் கட்' கொடுத்துவிட்டதாம் பாஜக.
லோக்சபா தேர்தலில் பாஜகவால் பெரும்பான்மைக்கான 272 இடங்களைப் பெற முடியவில்லை. பாஜகவுக்கு 240 இடங்கள்தான் கிடைத்தன. பாஜக தமது கூட்டணி கட்சிகளின் 53 எம்.பிக்கள் ஆதரவுடன் புதிய கூட்டணி ஆட்சியை அமைக்கிறது. நரேந்திர மோடியே 3-வது முறையாக பிரதமராகிறார்.

மத்தியில் கூட்டணி ஆட்சிதான்.. அதனால் ஆதரவு தரக் கூடிய நமக்கு எப்படியும் சில கேபினட் அமைச்சர்கள் பதவி கிடைக்கும் என தெலுங்குதேசம், ஜேடியூ, ஜேடிஎஸ் கட்சிகள் பேரம் பேசிப் பார்த்தன. ஜேடியூவைப் பொறுத்தவரையில் ரயில்வே அமைச்சர் பதவியை குறியாக வைத்தது. அத்துடன் மொத்தம் 5 கேபினட் அமைச்சர் பதவி கேட்டது. தெலுங்கு தேசம் கட்சியோ லோக்சபா சபாநாயகர் பதவி, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பதவி உள்ளிட்டவைகளைக் கேட்டது. ஜேடிஎஸ் குமாரசாமியோ, வேளாண் துறை அமைச்சர் பதவிக்கு அடிபோட்டாட்டார்.
இத்தனையையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பாஜக தரப்பு, எங்க நிலைப்பாடு இதுதான்.. இனி உங்க விருப்பம் என கறாராக முகத்தில் அறைந்தது போல பதிலைத் தந்ததாம். அதாவது பஞ்சாயத்து ராஜ் கேபினட் அமைச்சர் பதவியை ஜேடியூவுக்கு தருகிறதாம். லோக்சபா துணை சபாநாயகர் பதவி, விமானப் போக்குவரத்து, இரும்பு எஃகு துறை உள்ளிட்டவற்றை தெலுங்கு தேசம் கட்சிக்குத் தருமாம்.
இதனைத் தவிர நிதித்துறை, ரயில்வே துறை ஆகியவற்றின் இணை அமைச்சர் பதவி மட்டும்தான் கூட்டணிகளுக்குத் தர முடியும். மற்ற கேபினட் அமைச்சர் பதவியை எல்லாம் கனவில் கூட நினைக்கக் கூடாது என்பதுதான் பாஜகவின் பதிலாக இருந்ததாம். அப்படியும் கேபினட்தான் வேண்டுமெனில் சுற்றுலா, திறன் மேம்பாடு, அறிவியல் தொழிந்நுட்பம் போன்ற கேபினட் அமைச்சர் பதவியை வேண்டுமானால் வாங்கி கொள்ளுங்கள் எனவும் கூறியிருக்கிறது. ஆட்சி அமைப்பதற்கு முன்னரே பாஜக கடும் போக்கைக் காட்டுவதை 'ஆட்சி அமைக்க' ஆதரவு தரும் கூட்டணி கட்சிகள் கொஞ்சமும் ரசிக்காமல் அமைதி காக்கின்றன என்பதுதான் டெல்லி தகவல்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications