இன்று தேர்தல் நடந்தாலும் என்டிஏ கூட்டணி 324 தொகுதிகளில் வெல்லும்.. இந்தியா டுடே கருத்துக்கணிப்பு
டெல்லி: இப்போது லோக்சபா தேர்தல் நடந்தால் கூட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA alliance) 300-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று "இந்தியா டுடே சி வோட்டர்" கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த தேர்தலில் 234 தொகுதிகளில் வென்ற "இந்தியா" கூட்டணிக்கு மேலும் சறுக்கலே மிஞ்சும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. முதல் இரண்டு முறையும் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை பிடித்தது. ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

324 தொகுதிகளில் வெற்றி பெறும்
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 272 தொகுதிகளில் வெற்றி பெறுவது கட்டாயம். ஆனால், பாஜகவிற்கு 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது. தேசிய ஜனாநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளையும் சேர்த்து 293 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.
மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்து ஓராண்டை கடந்து விட்ட நிலையில், நாட்டில் இன்று தேர்தல் நடத்தப்பட்டால் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று இந்தியா டுடே சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரும் பலத்துடன் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இன்று தேர்தல் நடைபெற்றால் 324 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தியா" கூட்டணிக்கு மேலும் சறுக்கல் தான்
அதே நேரத்தில் கடந்த தேர்தலில் 234 தொகுதிகளில் வென்ற இந்தியா கூட்டணிக்கு மேலும் சறுக்கலே மிஞ்சும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. இன்றைய தேதியில் தேர்தல் நடைபெற்றால் 208 தொகுதிகளில் மட்டுமே இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரையில் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 54,788 பேரிடம் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. அதுபோக, கூடுதலாக 1,25,308 பேரிடம் இண்டர்வியூ எடுக்கப்பட்டதாகவும், 2,06,826 பேரிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும் இதில் கிடைத்த தரவுகளின் படி கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு இருப்பதாகவும் இந்தியா டுடே சிவோட்டர் தெரிவித்துள்ளது.
பாஜக தனிப்பெரும்பான்மை பெறாது
அதேநேரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இதேபோன்ற ஒரு கருத்துக்கணிப்பை இந்தியா டுடே வெளியிட்டது. அதில், பாஜக மட்டும் 281 இடங்களை பெற்று பெரும்பான்மை பெறும், தேசிய ஜனநாயக கூட்டணி 343 இடங்களை பெறும். அதன் வாக்கு சதவீதம் 3% உயர்ந்து 47% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.
ஆனால், தற்போது கடந்த கருத்துக்கணிப்பை விட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. கட்சி வாரியாக பார்த்தால் பொதுத்தேர்தல் இன்று நடைபெற்றால் பாஜக 260 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் தனிப்பெரும்பான்மைக்கு குறைவான எண்ணிக்கை என்பது கவனிக்கத்தக்கது.
காங்கிரசுக்கு கூடும் வெற்றி வாய்ப்பு
கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 281 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது பாஜகவிற்கு செல்வாக்கு சரிந்துள்ளது. அதேபோல, தேசிய ஜனநாயக கூட்டணி எண்ணிக்கையும் கடந்த பிப்ரவரி சர்வேயில் 343 ஆக இருந்தது. ஆனால் தற்பொது 324 ஆக சரிந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கடந்த 2024 தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இந்தியா டுடே சி வோட்டர் கருத்துக்கணிப்பில் 97 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என்று கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. எனினும், கடந்த பிப்ரவரி மாத கருத்துக்கணிப்பின் போது 78 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெறும் தரவு முடிவுகள் காட்டின.
வாக்கு திருட்டு பிரச்சினை
ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு படிப்படியாக செல்வாக்கு அதிகரிப்பதையே காட்டுகிறது. வாக்கு திருட்டு பிரச்சினையை காங்கிரஸ் தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில், அக்கட்சிக்கு தற்போது முன்பை விட செல்வாக்கு மெல்ல மெல்ல உயர்வதை கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications