வாத் டிரெய்லர்! டெல்லியை உலுக்கிய சாரதா வாக்கர் கொலை வழக்கின் சாயலா? நடிகை நீனா குப்தா பதில்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சைக்கோலஜிக்கல் த்ரில்லரான வாத் எனும் இந்தி படத்தின் டிரெய்லர் டெல்லி சாரதா வாக்கர் கொலை வழக்கை வைத்து உருவானதா என கேள்வி எழுந்துள்ளது.

ராஜீவ் பார்ன்வால் எழுத்தில் ஜாஸ்பால் சிங் சந்து இயக்கத்தில் உருவானது வாத் எனும் த்ரில்லர் படம். இந்த படத்தில் சஞ்சய் மிஸ்ராவும் நீனா குப்தாவும் நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் டிரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது. இந்த படத்தின் டிரெய்லரில் சஞ்சய் மிஸ்ரா, யாரையோ கொன்றுவிட்டு போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார். அங்கு ஒரு கொலை நடந்துவிட்டது என்கிறார். அதற்கு போலீஸ்காரர் அந்த சடலத்தை துண்டு துண்டாக வெட்டி விட்டாயா என கேட்கிறார்.

 எரித்துவிட்டாயா

எரித்துவிட்டாயா

பிறகு சடலத்தை எரித்து விட்டாயா என கேட்கிறார். அதற்கு சஞ்சய் மிஸ்ராவோ இல்லை புதைத்து விட்டேன் என்கிறார். என்னாது புதைத்துவிட்டாயா என கேட்கிறார். இப்படியாக படம் முழுக்க ரத்தகறையுடனே நகர்கிறது. எலியை பிடிக்க பொறி வைப்பது போன்று நகர்கிறது. ஆனால் யார் கொல்லப்படுகிறார்கள் என்பது த்ரில்லாக நகர்கிறது. மேலும் கடன் கொடுத்தவர்கள் சஞ்சய் மிஸ்ராவிடமும் அவரது மனைவி நீனா குப்தாவிடமும் மிரட்டி பணம் கேட்கிறார்கள்.

மிரட்டல்கள்

மிரட்டல்கள்


ஒரு வேளை மிரட்டல் தாங்கமுடியாமல் சஞ்சய் மிஸ்ரா, அந்த பணம் கொடுத்தவரை கொல்கிறாரா என்பது தெரியவில்லை. எனினும் இந்த படத்தில் கொல்லப்பட்டவரின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டுவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது அண்மையில் தலைநகர் டெல்லியையே உலுக்கிய சாரதா வாக்கர் கொலை வழக்கின் சாயலில் இருப்பதாக இந்த டிரெய்லரை பார்த்தோர் குறிப்பிட்டு வருகிறார்கள்.

 சாரதா வாக்கர்

சாரதா வாக்கர்

மும்பையை சேர்ந்த சாரதா வாக்கர் என்பவர் டேட்டிங் ஆப் மூலம் அப்தாப் பூனாவாலாவுடன் பழகுகிறார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. பின்னர் இருவரின் காதலுக்கும் சாரதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்தாப், சாரதாவை அழைத்துக் கொண்டு டெல்லியில் ஒரு வீட்டில் குடிபெயர்கிறார். அங்கு இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசிக்கிறார்கள்.

 திருமணம்

திருமணம்

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்தாபிடம் சாரதா கேட்கிறார். அதற்கு அப்தாப் மறுக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. இந்த தகராறில் சாரதாவை அப்தாப் கழுத்தை நெரித்து கொன்றுவிடுகிறார். இதையடுத்து அந்த பெண்ணின் சடலத்தை 35 துண்டுகளாக கூறுபோட்டு பிரிட்ஜில் வைத்துவிட்டார். அந்த பெண்ணின் தலையை மட்டும் ப்ரீட்சரில் வைத்திருந்தார்.

 சாரதா எங்கே

சாரதா எங்கே

இந்த நிலையில் சாரதாவை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகமடைந்த அவரது நண்பர்கள் சாரதாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். சாரதாவின் போனும் ஸ்விட்ச் ஆப் என்பதால் சந்தேகமடைந்து போலீஸுக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். போலீஸார் விசாரணையின் சாரதா கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலையில் வாத் டிரெய்லர் சாரதா வாக்கர் கொலையை ஒத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

 நீனா குப்தா மறுப்பு

நீனா குப்தா மறுப்பு

இதுகுறித்து அந்த படத்தில் நடித்த நீனா குப்தா கூறுகையில் வதந்திகளை நம்பாதீர்கள். சாரதா கொலை வழக்கிற்கும் வாத் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, எந்த சாயலும் இல்லை, ஒரு படத்தை குறித்து அனுமானங்கள் சொல்வதை முதலில் தயவு செய்து நிறுத்துங்கள். இந்த படத்தில் கொலை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எந்த இடத்திலும் சாரதா வழக்குடன் தொடர்புடையது அல்ல என தெரிவித்துள்ளார். பொதுவாக காமெடி வேடங்களில் நடிக்கும் சஞ்சய் மிஸ்ரா இந்த படத்தில் சீரியஸான ரோலில் நடித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+