தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை மாற்றுங்கள்... லோக்சபாவில் திமுக எம்.பிக்கள் முழக்கம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக்கோரி லோக்சபாவில் திமுக எம்.பிக்கள் முழக்கமிட்டனர். தமிழக ஆளுநர் ரவி சட்டத்தை மதிக்காமல் காட்டாட்சி நடத்துவதாகவும் எம்.பிக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
டெல்லி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக்கோரி டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக எம்.பிக்கள் லோக்சபாவில் முழக்கமிட்டனர். ஆளுநர் ரவி சட்டப்படி செயல்பட வேண்டும் எனவும் திமுக எம்.பிக்கள் முழக்கமிட்டனர்.
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலைப் பெற்றிட, மத்திய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசுத்தலைவருக்கு அதனை அனுப்பி வைக்காமல் கிடப்பில் போட்டார் ஆளுநர்.
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்றத்திற்கு உத்தரவிற்கு மாறாக உள்ளதாக ஆளுநர் மாளிகை தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு
இதனையடுத்து தமிழக ஆளுநரை நீக்கவேண்டும் என்று தமிழக எம்.பி.க்களும். எம்.எல்.ஏ.க்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி சிறப்பு சட்டசபைக் கூட்டம் கூட்டப்பட்டு நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மு.க ஸ்டாலின்
சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அரசியல் சாசனத்தின் படி மாநில அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்று கூறினார், மீண்டும் நிறைவேற்றப்படும் நீட் விலக்கு மசோதாவை காலம் தாழ்த்தாமல் குடியரசுத்தலைவருக்கு அனுப்புவார் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

மீண்டும் கிடப்பில் போட்ட ஆளுநர்
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா ஆளுநருக்ககு அனுப்பி வைக்கப்பட்டு ஒரு மாதங்களுக்கு மேலான நிலையில் அவர் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு இன்னமும் அனுப்பி வைக்காமல் இருக்கிறார். இந்த நிலையில் லோக்சபாவில் இன்று திமுக எம்பிக்கள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக மாற்றவேண்டும் என்று லோக்சபாவில் முழக்கமிட்டனர்.

டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு
லோக்சபாவில் பேசிய எம்பி டி.ஆர்.பாலு, 'ஆளுநரின் செயல்பாடுகள் முறையாக இல்லை. நீட் தேர்வு விலக்கு மசோதா மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆர்ட்டிகள் 200, 201ன் படி குடியரசுத்தலைவருக்கு தீர்மானத்தை அனுப்ப வேண்டும். ஆனால், ஆளுநர் அதை செய்யவில்லை என குற்றம்சாட்டினார். ஆளுநர் ரவி சட்டத்தை மதிக்காமல் காட்டாட்சி நடத்துவதாகவும். திமுக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய 7 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications