டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அச்சுறுத்தும் புதிய BA.2.75 ஓமிக்ரான்! ஜாக்கிரதையாக இருங்கள் மக்களே! ஆபத்தானதா? அறிகுறிகள் என்னென்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா வேரியண்ட் அடுத்த அலை குறித்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    தமிழ்நாட்டுக்கு மீண்டும் பூட்டுப்போடுமா கொரோனா? *Health

    இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த ஜனவரி இந்தியாவில் மூன்றாவது கொரோனா அலை ஏற்பட்டது.

    அப்போது வைரஸ் பாதிப்பு உச்சம் தொட்ட போதிலும், வைரஸ் பாதிப்பு தீவிரமாக இல்லை. இதனால் மூன்றாம் அலை மிக விரைவாகக் கட்டுக்குள் வந்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன.

     தமிழகத்தில் பரவும் BA.2.75 ஓமிக்ரான்.. அதிக வீரியமிக்கது! அடுத்த அலையை ஏற்படுத்துமா! அரோரா விளக்கம் தமிழகத்தில் பரவும் BA.2.75 ஓமிக்ரான்.. அதிக வீரியமிக்கது! அடுத்த அலையை ஏற்படுத்துமா! அரோரா விளக்கம்

     ஓமிக்ரான்

    ஓமிக்ரான்

    இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களாக உலகின் பல நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அதில் இந்தியா மட்டும் விதிவிலக்கு இல்லை. இந்நிலையில், இந்தியாவில் புதிதாக BA.2.75 என்ற ஓமிக்ரான் வகையை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். இந்த புதிய வகை ஓமிக்ரான் மிக வேகமாகப் பரவும் ஆபத்து உள்ளதால் எங்கு அடுத்த அலை ஏற்படுமோ என்று ஆய்வாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

     புதிய வகை

    புதிய வகை

    BA.2.75 ஓமிக்ரான் வேரியண்ட் வேக்சின் மற்றும் முந்தைய நோய்ப் பாதிப்புகளில் இருந்து கிடைத்த நோய் எதிர்ப்புச் சக்தியை மீறி பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சர்வதேச அளவில் பரவி உள்ள BA.5 உட்பட மற்ற ஓமிக்ரான் வகைகளை விட இது மிகவும் தீவிரமான நோயை ஏற்படுத்துமா என்பது குறித்த தெளிவாகத் தகவல்கள் இப்போது இல்லை.

     வேகமாகப் பரவுகிறது

    வேகமாகப் பரவுகிறது

    இது குறித்து வைராலஜி மருத்துவர் மேத்யூ பின்னிக்கர் கூறுகையில், "இந்த வகை ஓமிக்ரான் குறித்த ஆய்வை தொடங்கி உள்ளோம். இப்போது இருக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, குறிப்பாக இந்தியாவில், வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதாகவே தெரிகிறது. அதேநேரம் இது BA.5 வகையை விட அதிகமாக இருக்குமா என்று தெளிவாகத் தெரியவில்லை. ஏற்கனவே, இந்த வகை கொரோனா உலகின் பல நாடுகளில் குறைந்த அளவில் கண்டறியப்பட்டு உள்ளது: என்று அவர் தெரிவித்தார்.

    இந்தியா

    இந்தியா

    இந்த புதிய வகை ஓமிக்ரான் இந்தியாவில் பல மாநிலங்களில் பரவி உள்ளது. இது மற்ற வகைகளை விட வேகமாகப் பரவுவதாகவே தெரிவதாக ஆய்வாளர் லிபி துக்ரால் கூறினார். ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் கனடா உட்பட சுமார் 10 நாடுகளிலும் இது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது தற்போதுள்ள தகவல்களின்படி வைரஸ் பாதிப்பு வேகமாக உள்ளது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், அது எந்தளவுக்கு வேகமாகப் பரவுகிறது என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.

    வேக்சின்

    வேக்சின்

    இந்த வேரியிண்டகளில் உள்ள சில பிறழ்வுகளில் புரோத ஸ்பைக்கில் மாற்றம் உள்ளதாகவும் இது வைரஸை நமது செல்களுடன் வலுவாகப் பிணைத்துக் கொள்ள உதவுவதாகக் கூறப்பட்டு உள்ளது. அதேநேரம் பெரும்பாலான வேக்சின்கள் இந்த புரோத ஸ்பைக்கை குறி வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும். அதில் ஏற்படும் மரபணு மாற்றங்களால் வேக்சின் பலன் அளிக்காமல் போகலாம். எனவே, இது குறித்தும் நாம் உரிய ஆய்வை செய்ய வேண்டும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். வேக்சின்கள் கொரோனா பாதிப்பைத் தடுக்கவில்லை என்றாலும் மோசமான பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் தொடர்ந்து குறைந்தே வருகிறது.

     என்ன வழி

    என்ன வழி

    இந்த புதிய ஓமிக்ரான் வேரியண்ட் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்ளப் பல வாரங்கள் ஆகலாம். இதற்கிடையில், கொரோனா பாதிப்பை முழுமையாகக் கட்டுப்படுத்த வைரஸ்களைக் கண்டறிந்து கண்காணிக்கும் பணிகள் முக்கியம் என்றும் இதை நாம் தொடர்ச்சியாகச் செய்து வந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுக்குள் வைத்து இருக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

     லேதான பாதிப்பு

    லேதான பாதிப்பு

    இந்த வேரியன்ட்டால் தீவிர பாதிப்பு மற்றும் அறிகுறிகள் ஏற்படுவதில்லை. அது மட்டும் இல்லாமல் வித்தியாசமான எந்த அறிகுறியும் பதிவு செய்யப்படவில்லை. அதாவது பெரும்பாலும் லேசான பாதிப்புகளே ஏற்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

    English summary
    New omicron causes raise of cases in India: (புதிய ஓமிக்ரான் வேரியண்டால் இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா) Raise of Corona cases in India BA.2.75.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X