கோவையை அதிர வைத்த கார் சிலிண்டர் வெடிப்பு.. ஐஎஸ்-க்கு ஆள் சேர்த்த ஜமீல் பாஷா! அதிரடி காட்டிய என்ஐஏ.!
டெல்லி: தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக மேலும் 4 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஜமீல் பாஷா, அப்துல் ரகுமான் ஆகிய நான்கு பேர் மீது இந்த நடவடிக்கை என்.ஐ.ஏ.வால் எடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த நிகழ்வு தமிழகம் தழுவிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கே நேரில் சென்று ஆய்வு செய்த அப்போதைய டிஜிபி சைலேந்திரபாபு கோவை மக்கள் பதற்றப்பட தேவையில்லை என நம்பிக்கையூட்டினார். அதுமட்டுமல்ல கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க தமிழக அரசு பரிந்துரையும் செய்தது.
அதனடிப்படையில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஐமோஷா முபின் என்பவர் காரில் குண்டை வெடிக்க வைத்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு விசாரணையை தீவிரப்படுத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் இதுவரை 15 பேரை கைது செய்தனர். மேலும் ஐமோஷா முபினுடன் தொடர்பில் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து தாகா நசீர் என்பவர் மீதும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
இந்த நிலையில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக மேலும் 4 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஜமீல் பாஷா, அப்துல் ரகுமான் ஆகிய நான்கு பேர் மீது இந்த நடவடிக்கை என்.ஐ.ஏ.வால் எடுக்கப்பட்டிருக்கிறது. ஜமீல் பாஷா, முகமது உசேன், அப்துல் ரகுமான் மற்றும் இர்சாத் ஆகிய நான்கு பேர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்ததாக என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் ஏற்கனவே சேர்ந்திருந்த இவர்கள் அரபி வகுப்புகள் நடத்துவது போல மாணவர்களை வரவழைத்து மூளை சலவை செய்து ஐஎஸ் அமைப்பிற்கு சேர்த்துள்ளனர். இந்த திட்டத்திற்கு முக்கிய நபராக செயல்பட்டது ஜமீல் பாஷா என்பது தெரியவந்தது.
இவர் அரபி வகுப்புகள் நடத்துவதாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி அமைப்புகளை ஆரம்பித்து ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆட்கள் சேர்த்து வந்துள்ளார். இது மட்டுமல்லாமல் கோவையில் இர்ஷாத் மற்றும் முகமது ஹுசைனை அரபி வகுப்பு என்ற பெயரில் ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அது மட்டும் அல்லாமல் youtube, facebook உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரசங்கம் நடத்துவதாகவும், அதன் மூலம் தங்களை தொடர்பு கொள்ளும் நபர்களை மூளைச்சலவை செய்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்ததாக என்ஐஏ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், மேலும் பலர் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications