Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிர்பயா வழக்கு.. நாளை நான்கு பேரும் தூக்கிலிடப்பட மாட்டார்கள்... டெல்லி ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நிர்பயா வழக்கில் நாளை நான்கு பேரும் தூக்கிலடப்பட மாட்டார்கள், ஏனெனில் டெல்லி ஹைகோர்ட் நான்கு பேரையும் நாளை தூக்கிலிட தடை விதித்துள்ளது.

டெல்லியில் துணை மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா கடந்த 2012ம் ஆண்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கடுமையாக தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக முகேஷ்குமார் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (33) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களை நாளை அதாவது மார்ச் 3ம் த் தேதி டெல்லி திகார் சிறையில் தூக்கில வேண்டும் என்று கடந்த 17ம் தேதி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

சீராய்வு மனு

சீராய்வு மனு

இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி குற்றவாளி பவன் குப்தா உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சீராய்வு மனு தாக்கல் செய்தார். அத்துடன் டெல்லி நீதிமன்றம் பிறப்பித்த மரண தண்டனை உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

பவன் மனு தள்ளுபடி

பவன் மனு தள்ளுபடி

இந்நிலையில் இன்று பவன் குப்தாவின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்வி ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்எப் நாரிமன், ஆர் பானுமதி, அசோக் பூஷன் ஆகோயர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். நிர்பயா வழக்கில் உள்ள நான்கு குற்றவாளிகளில் 25 வயதான பவன் குப்தா மட்டுமே இதுவரை சட்டரீதியான விருப்பங்களை தீர்த்துக் கொள்ளாமல் இருந்தார்

ஜனாதிபதி நிராகரிப்பு

ஜனாதிபதி நிராகரிப்பு

இந்நிலையில் அவரம் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்துக்கு கருணை மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை குடியரசுத் தலைவர் இன்று உடனடியாக நிராகரித்தார்.. முகேஷ் குமார் சிங், வினய் குமார் சர்மா மற்றும் அக்‌ஷய் குமார் ஆகிய மூன்று குற்றவாளிகளின் கருணை மனுக்கள் ஏற்கனவே ஜனாதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

 தள்ளிப்போகுமா

தள்ளிப்போகுமா

இதேபோல் அக்‌ஷய் குமாரின் இரண்டாவது கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தள்ளுபடி செய்துள்ளார் . அக்சய் குமார், பவன்குமார் ஆகிய இருவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை போல், இவர்களின் தண்டனையை நிறைவேற்றுவதுக்கும் தடை விதிக்க டெல்லி பட்டியாலா மறுத்துள்ளது. எனவே நாளை காலை 6மணிக்கு திகார் சிறையில் முகேஷ்குமார் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (33) ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம் நாளை காலை 4 பேரையும் தூக்கிலட கூடாது என தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+