கல்விக்கு முக்கியத்துவம்...மத்திய பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்
டெல்லி : மத்திய பட்ஜெட்டில் 15,000 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளில், தேசிய கல்விக் கொள்கையின்படி 15,000 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். தனியார், அரசு சாரா அமைப்புக்களின் பங்களிப்புடன் புதிதாக 100 சைனிக் பள்ளிகள் அமைக்கப்படும்.

லடாக்கில் உயர் கல்வி மையம் மற்றும் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மலைவாழ் பகுதியில் 750 ஏகலைவன் மாடல் பள்ளிகள் அமைக்கப்படும். இதற்காக ஒதுக்கப்படும் நிதி ரூ.20 கோடியில் இருந்து ரூ.38 கோடியாக உயர்த்தப்படுகிறது. விரைவில் லே பகுதியில் பல்கலைகழகம் அமைக்கப்படும்.
ஆரம்ப மற்றும் உயர் கல்விக்காக இந்த பட்ஜெட்டில் ரூ.99,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீட்டை விட 4.96 சதவீதம் அதிகம் ஆகும். மலைப்பிரதேச பள்ளிகளின் வளர்ச்சிக்காக ரூ.48 கோடி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications