ஷார்ட் அன்ட் ஸ்வீட்டாக முடித்து கொண்ட நிர்மலா சீதாராமன்! கடந்த ஆண்டுகளை போல இல்லை.. எவ்வளவு நேரம்
நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 5ஆவது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில் இந்தாண்டு அவரது பட்ஜெட் உரை குறுகிய உரையாகவே இருந்துள்ளது.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது. அதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இன்றைய தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 6 வரை பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளன. மொத்தம் இரு அமர்வுகளாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

பட்ஜெட்
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடக்கும் நிலையில், மோடி அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இதுவாகும். மேலும், இந்தாண்டு மட்டும் மொத்தம் 9 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவே ஆட்சியில் உள்ளது. இதனால் மக்களைக் கவரும் வகையிலான பல திட்டங்கள் இதில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப பல அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் எதிர்பார்த்த வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய வரி முறையைப் பின்பற்றுவோரில் 3 லட்சம் வரை வரி இல்லை. புதிய வரி முறையைப் பின்பற்றுவோர் தகுந்த ஆவணங்களைக் காட்டி 7 லட்ச ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி கிரீன் எனர்ஜி மற்றும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க அது சார்ந்த பொருட்களுக்கு வரி குறைக்கப்படுவதாக அறிவித்தார்.

5ஆவது பட்ஜெட்
மேலும், மொபைல் மற்றும் டிவி பேனலுக்கான வரியும் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். அதேநேரம் தங்கம், வெள்ளி, வைர நகைகளுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கும் என்று அறிவித்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 5ஆவது பட்ஜெட் இதுவாகும். அவர் முதல்முறையாகக் கடந்த 2019இல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பின்னர் தொடர்ச்சியாக 5ஆவது முறையாக அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

87 நிமிடங்கள்
நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரைகள் எப்போதும் பெரியதாகவே இருந்துள்ளது. ஆனால், இந்தாண்டு அதற்கு நேர்மாறாக சுருக்கமாக அவர் தனது பட்ஜெட் உரையை முடித்துக் கொண்டார். முதல்முறையாக அவர் 90 நிமிடங்களுக்குள் தனது பட்ஜெட் உரையை முடித்துக் கொண்டுள்ளார். நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரைகளில் இதுதான் மிக சிறியதாகும். இந்தாண்டு அவரது பட்ஜெட் உரை வெறும் 87 நிமிடங்கள் மட்டுமே நீட்டித்தது. நிதி ஒதுக்கீடு முன்பு அரசின் சாதனைகளை விளக்கும் தகவல்கள் இருக்கும்.

குறைவு
கடந்தாண்டு இந்த உரை மிக பெரிதாக இருந்தது. ஆனால், இந்த முறை அரசின் சாதனைகள் குறிப்பிட்டுப் பேசுவதை அவர் சுருக்கமாக முடித்துக் கொண்டார். இதனால் அவரது பட்ஜெட் உரை 87 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. முன்னதாக கடந்த ஆண்டு, அவரது பட்ஜெட் உரை 92 நிமிடங்கள் மட்டுமே இருந்தது. இந்தாண்டு அதைக் காட்டிலும் 5 நிமிடங்களுக்குக் குறைவாகவே அவர் பட்ஜெட் உரையை ஆற்றினார். கடந்த 2021இல் கொரோனாவுக்கு பிந்தைய முதல் பட்ஜெட்டில், அவரது பட்ஜெட் உரை சுமார் ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது..

2.40 மணி நேரம்
சுதந்திர இந்திய வரலாற்றில் அதிக நேரம் பட்ஜெட் உரையை வாசித்தவரும் நிர்மலா சீதாராமன் தான். கடந்த 2020ஆம் ஆண்டில், அதிகபட்சமாக 2 மணிநேரம் 40 நிமிடங்கள் அவரது பட்ஜெட் உரை நீண்டது. அவ்வளவு நீண்ட நேரம் நின்று கொண்டு அவரால் தொடர்ச்சியாக பட்ஜெட் உரையை வாசிக்க முடியவில்லை. இதனால் அவ்வப்போது தண்ணீர் குடித்து சற்று ஆசுவாசப்படுத்தினார். அந்தாண்டு பட்ஜெட் உரையை அவர் முழுமையாக வாசிக்கச் சிரமப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்
நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்த முதல் பட்ஜெட் (2019-20) மொத்தம் 2.15 மணி நேரம் இருந்தது. அதை முறியடிக்கும் வகையில் அவரது அடுத்த பட்ஜெட் உரை இருந்தது. 202-21இல் அவரது பட்ஜெட் 2.42 மணி நேரமாக இருந்தது. அதன் பிறகு 2021-22இல் பட்ஜெட் நேரம் 1.50 மணி நேரமாகவும் அதைத் தொடர்ந்து 2022-23 பட்ஜெட் உரை 1.32 மணி நேரமாகவும் இருந்தது. இந்தாண்டு அவர் முதல்முறையாக 90 நிமிடங்களுக்குள் பட்ஜெட் உரையை முடித்துக்கொண்டார். இந்தாண்டு அவரது பட்ஜெட் 1.26 மணி நேரம் மட்டுமே இருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications