4 ஆண்டுகளில் இது தான் கம்மி! வெறும் 90 நிமிடங்களில் முடிந்த இந்த ஆண்டிற்கான பட்ஜெட் உரை
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 4ஆவது முறையாக இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்தியாவில் கடந்த 2017 முதல் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இன்று காலை மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் காகிதமில்லாத முறையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலங்கள்
கடந்த 2019 ஆம் ஆண்டில் தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2019-20 நிதியாண்டிற்கான அந்த பட்ஜெட் உரை அதிக 2 மணி நேரம் 17 நிமிடங்கள் இருந்தது. இதன் மூலம் மிக நீண்ட நேரம் பட்ஜெட் உரையை வாசித்த அமைச்சர் என்ற சாதனையைப் படைத்தார். அடுத்த ஆண்டு, 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்து தனது சாதனையைத் தானே முறியடித்தார். அதுவும் கூட முழு பட்ஜெட் உரை முடியவில்லை. அப்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் கடைசி இரண்டு பக்கங்களை வாசிக்கவில்லை.

90 நிமிடங்கள்
நிர்மலா சீதாராமன் 2022ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்தார். இன்றைய தினம் அவரது பட்ஜெட் உரை மொத்தமே ஒன்றரை மணி நேரம் மட்டுமே இருந்தது. நிர்மலா சீதாராமன் இதுவரை நான்கு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். அதில் இந்த ஆண்டு அவர் தாக்கல் செய்த பட்ஜெட் தான் குறுகியது. முன்னதாக, கடந்த 2021இல், அவரது பட்ஜெட் உரை 100 நிமிடங்கள் இருந்தது. சராசரியாக, ஒரு பட்ஜெட் உரை 90 முதல் 120 நிமிடங்கள் வரை இருக்கும்.

நீண்ட பட்ஜெட் உரை
நிர்மலா சீதாராமனுக்கு முன், ஜஸ்வந்த் சிங்கின் பட்ஜெட் தான் மிக நீண்ட பட்ஜெட் உரை என்ற சாதனையை வைத்திருந்தது. கடந்த 2003ல் அவர் 2 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதேபோல சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகக் குறுகிய பட்ஜெட் உரையை ஹிருபாய் எம் படேல் 1977இல் ஆற்றினார். அந்த ஆண்டின் இடைக்கால பட்ஜெட் வெறும் 800 வார்த்தைகள் மட்டுமே இருந்தது.
Recommended Video

வேகமாக வளரும் பொருளாதாரம்
'உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம்' என்பதைக் குறிக்கும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கடந்த நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி 7.3% குறைந்த நிலையில், வரும் மார்ச் மாதத்துடன் முடியும் இந்த நிதியாண்டு 9.2%ஆக உயரும் எனக் கூறப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சில நாட்களில் வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில், இந்த பட்ஜெட் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications