நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வன்மத்துடன் பேசுகிறார்.. நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் ஆவேசம்
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் மீது வன்மத்துடன் பேசுவதாக திமுக எம்பி தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏழைகள் படும் கஷ்டத்தை அறியாதவர் என்றும் தயாநிதி மாறன் கூறினார்.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் லோக்சபாவில் விவாதங்கள் நடந்து வருகிறது. விவாதத்தில் பேசிய திமுகவைச் சேர்ந்த மத்திய சென்னை தொகுதி எம்பியான தயாநிதி மாறன் பேசுகையில், தமிழ்நாடு அரசு ரூ.37000 கோடி வெள்ள நிவாரணம் கேட்டு ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை..

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் போது, வெங்காயமா, வெங்காயத்தின் விலை ஏறிவிட்டதா, நான் வெங்காயம் சாப்பிடுவது இல்லை என்று பேசினார். இந்த பேச்சு ஏழைகளின் கஷ்டத்தை அறியாமல் பணக்காரரக்ளை ஆதரிக்கும் பேச்சு தானே.. கோவிட்டுக்கு பிறகு பெட்ரோல் விலையையும், கேஸ் விலையையும் ஏற்றிவிட்டீர்களே.. பெட்ரோல் விலை 100 ரூபாயை தொட்டுவிட்டது. டீசல் விலை 100 ரூபாயை தொட்டுவிட்டது.. கேஸ்விலை கிட்டத்தட்ட 1000 ரூபாய்க்கு விற்கிறது..
ரஷ்யாவில் போரினால் அங்கு குறைந்த விலையில் எண்ணெய் கிடைக்கிறது. அந்த எண்ணைய்யை யார் வாங்குகிறார்கள்? ரிலையன்ஸ் நிறுவனமும் அதானி நிறுவனமும் வாங்குகிறார்கள்... அவற்றை இந்தியாவிற்கு கொடுக்கவில்லை. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.. கொள்ள லாபத்தை அடித்தார்கள். அந்த லாபத்திலே நமக்கு விலையை குறைத்திருக்கலாமே, நீங்கள் செய்யவே இல்லையே.. ஆனால் என்ன செய்தார்கள் இந்த பாஜக அரசு ? ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும், ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், பிரதமருடன் செல்பி ஸ்டாண்ட் வைத்தார்கள்.. அந்த செல்பி ஸ்டாண்டின் விலை 6.5 லட்சம் ரூபாய்.. இது தேவையா.. அந்த பணத்தை மக்களுக்கு பயனுள்ள வகையில் நீங்கள் செலவழித்திருக்கலாமே.. ஆனால் செய்யவில்லை.. என்ன செய்தீர்கள்.. அமலாக்கத்துறை பயன்படுத்தினீர்கள்..
காங்கிரஸ் கட்சியில் மறைந்த தலைவர் இந்திரா காந்தி எமர்ஜென்சியை தவறாக பயன்படுத்தினார்.. அந்த தவறை நாங்கள் செய்ய மாட்டோம் என்று சொன்னீர்கள்.. ஆனால் இன்று எமர்ஜென்சியை போலவே நீங்கள் அமலாக்கத்துறையை பயன்படுத்தி உள்ளீர்கள். கிட்டத்தட்ட 95 சதவீத வழக்குகள் யார் மீது இருக்கிறது என்றால், எதிர்க்கட்சியினர் மீது தான் இருக்கிறது.. உங்களால் திணிக்கப்பட்டு வழக்குகள் போடப்பட்டுளளது, இதை உங்கள் லாபத்திற்காக செய்கிறீர்களா இல்லையா?
பணமதிப்பிழப்பின் போது பிரதமர் படம் போட்டு முழு பக்கம் விளம்பரம் வந்தது.. என்ன விளம்பரம் என்றால், பேடிஎம் விளம்பரம். டிஜிட்டல் பரிமாற்றத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று சொன்னார்கள்.. இன்று பேடிஎம் மூடும் நிலையில்இருக்கிறது.. சரியாக செயல்படவில்லை இதனை நியாயமா என்று மக்கள் கேட்பார்களே.. என்ன தவறு நடந்தது என்று?
அதேபோல் நீட்டுக்கு எதிராக எங்கள் தலைவர் ஸ்டாலினும், இளைய தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நீட்டால் எங்கள் தமிழ்நாட்டில் மட்டுமா குழந்தைகள் இறக்கிறார்கள்.. முதல் தலைமுறை குழந்தைகள் பட்டதாரி ஆக முடியாமல் தவிக்கிறார்களே.. பிற்படுத்தப்பட்டவர்கள் மருத்துவர்கள் ஆகக்கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் தானே நீட்.. ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் என்ன நடக்கிறது.. கோட்டா மாநிலத்தில் குழந்தைகள் தூக்கிட்டு சாகிறார்கள். காரணம் நீங்கள் கொண்டு வந்த நீட் தான் காரணம். இன்றாவது மனிதாபிமானத்துடன் நீட்டை ரத்து செய்ய வேண்டும்.
2018ம் ஆண்டு இதே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னைக்கு வந்தார். அப்போது ஜெயலலிதா உயிருடன் இல்லை... அதிமுகவை கைப்பற்றி முதலமைச்சர் ஆகலாம் என்ற கனவு திட்டத்துடன் வந்தார். அப்போது நிர்மலா சீதாராமன் சொன்னார், இந்த ஆண்டு நீட் வராது என்றார். நீட் இந்த ஓராண்டு வராமல் முயற்சிக்கிறோம் என்று மக்களை ஏமாற்றினார்.
பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழில் பேசுகிறார்.. கர்நாடகா சென்றால் கன்னடத்தில் பேசுகிறார். தெலுங்கானா சென்றால் தெலுங்கில் பேசுகிறார்...மேற்கு வங்காளம் சென்றால் வங்காள மொழியில் பேசுகிறார்.. இதை பார்க்கும் போது, எங்கள் ஊரில் ஒன்று சொல்வார்கள். கோழி பிடிக்க வருபவர் நம்மை போலவே பக்பக் என்று பேசுகிறாரே என்று கோழி நினைக்குமாம்.. அந்த கோழிக்கு அப்புறம் தான் தெரியுமாம்.. அந்த கோழியை வறுத்து சாப்பிட கோழி பாசையில் பேசினான் என்று... அதேபோல் தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது." இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications