பேஷ் பேஷ்.. நிர்மலா சீதாராமனின் மாஸ்க்கை கவனிச்சீங்களா.. சுயசார்பை செயலில் காட்டி அசத்தல்!
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் துணியினாலான முகக் கவசத்தை அணிந்துள்ளது தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் திட்டம் குறித்து பேசுவதற்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.
Recommended Video
கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் தற்போது மே 17 ஆம் தேதி வரை முழு முடக்கம் அமலில் உள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நாட்டு மக்களுக்கு காணொலி மூலம் உரையாற்றினார்.
அப்போது அவர் தற்சார்புள்ள இந்தியா குறித்து விளக்கினார். ஒரு தலைகீழ் மாற்றம் தேவை என்றார். மேலும் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு திட்டத்தை அறிவித்தார்.

செய்தியாளர்கள்
இந்த திட்டம் குறித்து விரிவாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் முகத்தில் கருப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் துணியிலாலான மாஸ்கை அணிந்திருந்தார். கொரோனா இந்தியாவில் பரவத் தொடங்கிய காலத்தில் சீனா ஏராளமான மாஸ்க்குளையும் பாதுகாப்பு உபகரணங்களையும் பதுக்கி வைத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செயல்முறை விளக்கம்
இதனால் இந்தியாவில் மாஸ்க்குகளுக்கு தட்டுப்பாடு நிலவி வந்தது. அப்போது துணியிலாலான முகக் கவசங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. அந்த மாஸ்க்கை எப்படி தயார் செய்வது என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்ட செயல்முறை விளக்கமாக செய்து காண்பித்தனர்.

மாஸ்க்
அதன் பின்னர் நாட்டு மக்களுடன் உரையாற்றிய போதெல்லாம் துணியினாலான மாஸ்க்குகளையே பிரதமர் பயன்படுத்தி வந்தார். அது போல் இன்று சுயசார்பு இந்தியா திட்டம் குறித்து பேச வந்த நிர்மலா சீதாராமனும் துணியினாலான மாஸ்கை அணிந்திருந்தது மிகவும் பொருத்தமாக இருந்தது.

சிவப்பு பை
இது போல் கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது வழக்கமாக சூட்கேஸில் அறிக்கை நகல்களை கொண்டு வராமல் சிவப்பு பையில் கொண்டு வந்தார். அந்த பையை தனது தாய் தைத்து கொடுத்ததாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications