டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தோல்வி என்றால் காணாமல் போய்விடுகிறார்கள்.. மோடியை சீண்டும் நிதின் கட்கரி.. பாஜகவில் பிளவா?

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் மோடியையும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவையும் மறைமுகமாக தாக்கி பேசிய இருப்பது வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    2019 தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மாற்றப்படுகிறாரா?- வீடியோ

    டெல்லி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் மோடியையும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவையும் மறைமுகமாக தாக்கி பேசிய இருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

    2019 தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்து உள்ளது. பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவாரா என்று சந்தேகங்கள் எழுந்துள்ளது.

    பிரதமர் மோடிக்கு பதிலாக வேறு ஒரு நபரை முன்னிறுத்த வேண்டும் என்றும் பாஜகவில் குரல்கள் எழுந்துள்ளது.

    நிதின் பெயர்

    நிதின் பெயர்

    மோடிக்கு பதிலாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக பாஜக நிறுத்த வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது. இவருக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஆதரவு தெரிவித்து வருகிறது. இது பாஜகவில் சிறிய பிளவை உருவாக்கி உள்ளது.

    யாரும் இல்லை

    யாரும் இல்லை

    இந்த நிலையில் நிதின் கட்கரி பாஜகவின் ஐந்து மாநில தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், தலைமை என்பது வெற்றி தோல்வி இரண்டிற்கும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். வெற்றியை கொண்டாட நிறைய பேர் இருக்கிறார்கள். தோல்விதான் இங்கு அனாதையாக உள்ளது. தோல்விக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை.

    தோல்வி

    தோல்வி

    அரசியலில் வெற்றி தோல்வியை இரண்டையும் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கு வெற்றி என்றால் பொறுப்பேற்கிறார்கள். தோல்வி என்றால் காணாமல் போய்விடுகிறார்கள். தவறுகளை இங்கு யாரும் திருத்திக் கொள்வதில்லை. இது ஒரு நல்ல தலைமைக்கு ஏற்றதில்லை, என்று கூறியுள்ளார்.

    பெரிய சர்ச்சை

    பெரிய சர்ச்சை

    இவரது இந்த பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே மோடிக்கு பதிலாக நிதின் பாஜகவில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்து இருந்தது. இந்த நிலையில் தற்போது மோடியையும், அமித் ஷாவையும் மறைமுகமாக தாக்கும் வண்ணத்தில் இவர் பேசி இருப்பதாக கூறப்படுகிறது.

    English summary
    Nitin Gadkari opinion on BJP's loss in 5 state election makes a fire in the party .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X