இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் போனது இதற்காகத்தான்.. போட்டு உடைத்த ராகுல் காந்தி
டெல்லி: இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த நிதிஷ் குமார், அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கைகோர்த்துள்ளார். நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து முதல் முறையாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
லோக் சபா தேர்தல் இன்னும் விரைவில் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பில் பாஜக தேர்தல் வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது. இதேபோல் இந்த முறை பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணி உருவாகியது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி என பல கட்சிகள் ஒன்றிணைந்தது.

இதில், இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். நாடு முழுக்க உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணியை உருவாக்கிய முக்கிய நபர்களில் ஒருவராக நிதிஷ் குமார் இருந்தார். ஆனால், திடீர் திருப்பமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு "இந்தியா" கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக உடன் கை கோர்த்தார்.
நிதிஷ் குமார் விலகல்: இது இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியா கூட்டணியை முன்னின்று ஒருங்கிணைத்தாலும் தனக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று நிதிஷ்குமார் கருதியதாக சொல்லப்பட்டது. குறிப்பாக இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து ஆலோசனையின் போது நிதிஷ்குமார் பெயரைப் பரிசீலனை செய்துள்ளனர்.
இருப்பினும், ஒருங்கிணைப்பாளராக யாரைப் போடலாம் என்பது குறித்து மம்தா பானர்ஜியுடன் ஆலோசிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியதே நிதிஷ் குமாரை கோபத்தில் தள்ளியுள்ளது. இதுபோன்ற அதிருப்தி காரணமாக இந்தியா கூட்டணியில் இருந்து விலகும் முடிவை நிதிஷ்குமார் எடுத்ததாக சொல்லப்படுகிறது.
யூ - டேர்ன் அடித்து விட்டார்: நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து கருத்து எதுவும் கூறாமல் இருந்த ராகுல் காந்தி முதல் முறையாக இன்று மவுனம் கலைத்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:- நிதிஷ் குமாரை சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாங்களும் (காங்கிரஸ்) ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் வலியுறுத்தியுனோம்.
ஆனால், பாஜக இதற்கு அச்சப்பட்டது. சாதி வாரி கணக்கெடுப்பு திட்டத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. நிதிஷ் குமார் சிக்கிக் கொண்டார். அவரை புறவாசல் வழியாக வெளியேற பாஜக வழிகொடுத்துள்ளது. சிறிய அழுத்ததிற்கே அவர் யூ - டேர்ன் அடித்து விட்டார். நிதிஷ் குமார் எங்களுக்கு தேவையில்லை" என்று காட்டமாக கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications