ஆஹா சீன் மாறுதே.. "பிரதமர்" பதவி.. இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ் தரப்பிற்கு வந்த அழைப்பு? பரபர
டெல்லி: நிதிஷ்குமாரை தங்கள் பக்கம் இழுக்க இந்தியா கூட்டணி பிரதமர் பதவியைத் தரத் தயாராக இருந்ததாக நிதிஷ் கட்சியைச் சேர்ந்த கே.சி. தியாகி பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் பாஜக ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆதரவு மிக முக்கியமாக மாறி இருக்கிறது.

இருவரையும் இந்தியா கூட்டணி தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே பீகார் முதல்வரும் ஜேடியு கட்சித் தலைவருமான கே.சி. தியாகி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நிதிஷ் குமார்: அதாவது நிதிஷ் குமாரை தங்கள் பக்கம் இழுக்க எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி பிரதமர் பதவியை வழங்கத் தயாராக இருந்ததாகக் கூறிய கே.சி. தியாகி, இருப்பினும் நிதிஷ்குமார் அதை ஏற்க மறுத்துவிட்டார் என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நிதிஷ் குமாருக்கு எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியில் இருந்து பிரதமராக வாய்ப்பு கிடைத்தது. அவர் இந்தியா கூட்டணியின் கன்வீனராக இருக்கக் கூடாது என யார் எதிர்ப்பு தெரிவித்தார்களோ.. இன்று அவர்களே பிரதமர் பதவி வழங்கத் தயார் என்றார்கள். ஆனால், நிதிஷ் அதை மறுத்துவிட்டார், நாங்கள் என்டிஏ கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
என்டிஏ கூட்டணி: இருப்பினும், யார் பிரதமர் பதவியை வழங்குவதாக கூறினர் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். இந்த கேள்விக்கு அவர், "சில தலைவர்கள் நிதிஷ் குமாரை நேரடியாக அணுக விரும்பினர். ஆனால், அவர்கள் மோசமாக எங்கள் தலைவரை நடத்தியதாலேயே நாங்கள் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறினோம். அதன் பிறகு தான் என்டிஏ கூட்டணியில் இணைந்தோம். இதே கூட்டணியில் பயணிப்போம்.. கூட்டணி மாறும் பேச்சுக்கே இடமில்லை" என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் மறுப்பு: கே.சி. தியாகியின் இந்தப் பேச்சு தேசிய அரசியலில் பரபரப்பைக் கிளப்பியது. இருப்பினும், இதை மறுத்துள்ள காங்கிரஸ், இதுபோல எந்தவொரு ஆஃபரையும் தாங்கள் முன்மொழியவில்லை எனக் கூறியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "நிதிஷ் குமாரை பிரதமர் ஆக்க இந்தியா கூட்டணியில் இருந்து யாரும் அணுகியது போலத் தெரியவில்லை.. எங்களிடம் அப்படி எந்தத் தகவலும் இல்லை. யார் அணுகியது என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்" என்றார்.
நடந்த முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அக்கட்சி 240 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் தனிப்பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. இதனால் பாஜக ஆட்சி அமைக்க என்டிஏவின் கூட்டணிக் கட்சிகளான ஜேடியு மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் ஆதரவு மிக முக்கியமானதாக மாறி இருக்கிறது.
பிரதமர் மோடி: லோக்சபா தேர்தலில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இல்லை என்ற தகவல் வெளியான உடனேயே தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரை தங்கள் பக்கம் கொண்டு வர இந்தியா கூட்டணி முயற்சிகள் எடுத்தாக கூறப்பட்டது. இருப்பினும், சந்திரபாபு நாயுடுவும் சரி, நிதிஷ்குமாரும் சரி என்டிஏ கூட்டணியில் தொடர்வது என்றை முடிவை எடுத்துவிட்டனர். அவர்கள் என்டிஏ கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவைத் தெரிவித்த நிலையில், அதன் பின்னரே மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவர் நாளை மாலை மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications