16% பாதிப்பு.. பயம் காட்டும் டெல்டா.. கோவிஷீல்டுக்கு பெருசா பவர் இருக்காது போலயே.. ஐசிஎம்ஆர் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கோவிஷீல்டு வேக்சின் எடுத்துக்கொண்டவர்களில் 16% பேருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இல்லை என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட அளவிலான நபர்களின் மாதிரிகளை ஐசிஎம்ஆர் சோதனை செய்ததில் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளது.

Recommended Video

    India-வில் Coronavirus 3rd Wave அடுத்த மாதம் ஏற்படலாம்.. SBI வல்லுநர் குழு எச்சரிக்கை

    உலகம் முழுக்க டெல்டா வகை கொரோனா மிகவும் மோசமாக பரவி வருகிறது. பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 4ம் அலை ஏற்பட டெல்டா வகை கொரோனா முக்கிய காரணமாக இருந்தது. இதுவரை மக்களிடையே பரவிய கொரோனா வைரஸ் வகைளிலேயே டெல்டா வகை உருமாறிய கொரோனாதான் அதிக வேகமும், ஆபத்தும் கொண்டது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. '

    டெல்டா வகை அதிக கேஸ்களை ஏற்படுத்துவதால், அதிக பேர் மருத்துவமனைகளில் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. பலி எண்ணிக்கையை இது அதிகரிக்கிறது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

    சோதனை

    சோதனை

    இந்த நிலையில் டெல்டா வகை கொரோனா வைரசுக்கு வேக்சின் எந்த அளவிற்கு பயன் தருகிறது என்று ஐசிஎம்ஆர் ஆய்வு செய்து வருகிறது. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய வேக்சின் எடுத்துக்கொண்டவர்கள் எந்த அளவிற்கு கொரோனா டெல்டா வகை வைரசுக்கு எதிராக எதிர்ப்பு சக்தி கொண்டு இருக்கிறார்கள் என்று சோதனை செய்தது. வேக்சின் டோஸ் 1 மற்றும் 2 எடுத்துக் கொண்டவர்கள் பலரின் மாதிரிகளை எடுத்து இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்

     எவ்வளவு பேருக்கு

    எவ்வளவு பேருக்கு

    இதில் கோவிஷீல்டு வேக்சின் எடுத்துக்கொண்டவர்களில் 16% பேருக்கு (சோதனை செய்யப்பட்ட சாம்பிள்களில்) டெல்டா வகை கொரோனா வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இல்லை என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இவர்கள் இரண்டு டோஸ் கோவிஷீல்டு எடுத்தும் கூட இந்த 16% பேரிடம் டெல்டா வகை கொரோனாவிற்கு எதிரான ஆண்டிபாடி இல்லை. ஒரே ஒரு டோஸ் கோவிஷீல்டு எடுத்தவர்கள் 58.1% பேரிடம் டெல்டா வகை கொரோனாவிற்கு எதிரான ஆண்டிபாடி இல்லை.

     விளக்கம்

    விளக்கம்

    பொதுவாக கொரோனாவை அழிப்பதற்காக, அதன் பரவலை தடுப்பதற்காக உடலில் உருவாகும் ஆண்டிபாடி மிக மிக குறைவான அளவிலேயே டெல்டா வகை கொரோனாவை அழிப்பதற்காக உருவாகி உள்ளது. கோவிஷீல்ட் இந்த இடத்தில் சறுக்கி இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. ஆரம்ப கால கொரோனாவிற்கு எதிராக கோவிஷீல்ட் செயல்பட்டது போல டெல்டாவிற்கு எதிராக செயல்பட முடியவில்லை.

    குறைவு

    குறைவு

    தொடக்கத்தில் இந்தியாவில் பரவிய B1 வகை கொரோனாவிற்கு எதிராக கோவிஷீல்ட் 78% தடுப்பாற்றலை ஒரு டோஸிலேயே பெற்று இருந்தது. ஆனால் டெல்டா வகை கொரோனாவில் இது 41.9% குறைந்துள்ளது. இன்னும் இந்த சோதனை உடல் குறைபாடு உள்ளவர்கள், வயதானவர்களிடம் எடுக்கப்படவில்லை. இவர்களிடம் கோவிஷீல்ட் தடுப்பாற்றல் மேலும் குறைவாக இருக்கும் வாய்ப்பு உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது

    என்ன விளக்கம்

    என்ன விளக்கம்

    இது தொடர்பாக ஐசிஎம்ஆர் வல்லுநர்கள் அளித்துள்ள விளக்கத்தில், டெல்டா வகை கொரோனாவிற்கு எதிரான ஆண்டிபாடி கோவிஷீல்ட் வேக்சின் எடுத்தும் இல்லை என்றால், சுத்தமாக ஆண்டிபாடியே இல்லை என்று கூற முடியாது. மிக குறைவான ஆண்டிபாடி இருந்திருக்கும். கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ஆண்டிபாடி இருந்திருக்கும். இதனால் தொடர்ந்து வேக்சின் எடுப்பதே நோய் பரவலை தடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர் .

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+