சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்? எதிர்க்கட்சிகள் பிளான் என தகவல்
டெல்லி: பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் திங்கள் கிழமை இந்த தீர்மானத்தை கொண்டு வர காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்காக எதிர்க்கட்சிகளுடன் அக்கட்சி ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற லோக்சபா தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் திங்கள்கிழமை சபாநாயகருக்கு எதிராக இந்த தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

பிற கட்சிகளுடன் ஆலோசனை
காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி பிற கட்சிகளுடனுன் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அவதூறு வழக்கில் வயநாடு தொகுதி எம்.பியும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு மறுநாளே ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது.

எதிக்கட்சிகள் கடும் கண்டனம்
இதற்கான உத்தரவை லோக்சபா செயலகம் பிறப்பித்தது. ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. மத்தியில் ஆளும் பாஜக அரசை கடுமையாக சாடியிருந்தது. இந்த சூழலில் தான் லோக்சபா சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எனினும், சபாநாயகருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் முன்வந்திருப்பது எதற்காக என்று தெளிவாக தெரியவில்லை.

மைக்ரோன்போன்கள் மியூட் செய்யப்படுவதாக
நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு சமயங்களில் சபாநாயகருக்கு எதிராக காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. குறிப்பாக லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் பேசும் போது அவர்களின் மைக்ரோன்போன்கள் மியூட் செய்யப்படுவதாகவும் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் வகையில் இப்படி மத்திய அரசு நடந்து கொள்வதாக நேரடியாக குற்றம் சாட்டியிருந்தது. கடந்த 17 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான வீடியோ ஒன்றும் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

50 எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆதரவு
அந்த வீடியோவில், எதிரக்கட்சி உறுப்பினர்கள் அவையில் போராட்டத்தில் ஈடுபடும் போது அவர்கள் எழுப்பிய கோஷம் எதுவும் கேட்காமல் மியூட் ஆகியிருந்தது. எனினும், தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாக ஆளும் பாஜக அரசு விளக்கம் அளித்து இருந்தது.
காங்கிரஸ் கட்சி இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர குறைந்தது 50 எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆதரவு தேவைப்படும். எனவே, எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெறும் முனைப்பில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications