ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல்
டெல்லி: ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யபட்டுள்ளது. அரசியல் சாசன 67 (பி)-ன் கீழ் ஜக்தீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. நடப்பு கூட்டத்தொடரில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளுக்கும், ஜக்தீப் தன்கருக்கும் இடையே தினமும் மோதல் ஏற்பட்டு வருகிறது.
அதானி முறைகேட்டை அவையில் எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுப்பதாக கூறி ஜக்தீப் தன்கர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதேவேளையில், நேற்று அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்த குற்றச்சாட்டை எழுப்ப ஆளுங்கட்சி எம்பிக்களுக்கு அனுமதி கொடுத்தார். இதனால், எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
எனவே ஜக்தீப் தன்கரை பதவியில் இருந்து அவரை நீக்க எதிர்க்கட்சிகள் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், ஜக்தீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன.
காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் 50 க்கும் மேற்பட்டவர்கள் இந்த நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை தாக்கல் செய்தனர். எதிர்க்கட்சி எம்பிக்கள் போதிய எண்ணிக்கை இல்லாததால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடையும் என்று கூறப்படுகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications