சபநாயகர் பதவி நீக்கம்? லோக்சபாவில் காங்., பாஜக மோதல்.. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அனல் வாதம்
டெல்லி: லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவை பதவி நீக்கம் செய்வதற்கான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவாதத்துக்கு 10 மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சபாநாயகர் ஓம்பிர்லா மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜுஜு, அமித்ஷா பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் லோக்சபாவில் அனல் பறக்கிறது.
லோக்சபா சபாநாயகராக இருப்பவர் ஓம்பிர்லா. இவர் பாஜகவை சேர்ந்தவர். இந்நிலையில் தான் நாடாளுமன்ற லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்களை பேச அனுமதிப்பது இல்லை என்று தொடர்ந்து காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஓம்பிர்லா ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாகவும், நடுநிலைமை தவறுவதாகவும் கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் ஓம்பிர்லாவை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்க கோரும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
நம்பிக்கையில்லா தீர்மானம்
அதன்படி, காங்கிரஸின் எம்பி கவுரவ் கோகோய் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸை வழங்கினார். இந்த நோட்டீஸில் மொத்தம் 118 எம்பிக்ககளின் கையெழுத்து போட்டுள்ளனர். ராகுல் காந்தி கையெழுத்திடவில்லை. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் என்பதால் சபையின் மாண்பு, நாகரீகம் கருதி அவர் இந்த நோட்டீஸில் கையெழுத்திடவில்லை.
10 மணிநேரம் விவாதம்
இந்நிலையில் தான் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்று காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது. அது ஏற்கப்பட்டது. இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு 10 மணிநேரம் ஒதுக்கப்பட்டது. அதன்படி காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் விவாதத்தை தொடங்கினார். அப்போது ஓம்பிர்லா மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதுபற்றி கவுரவ் கோகாய் கூறியதாவது:
ஒருதலைபட்சமாக ஓம்பிர்லா
"அரசியலமைப்பைக் காப்பாற்றவே எதிர்க்கட்சிகள் இத்தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலை பட்சமாக செயல்படுகிறார். கடந்த பிப்ரவரி மாதம் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் (ராகுல்காந்தி) அவையில் பேச அனுமதிக்கப்படவில்லை.
இதுவே இத்தீர்மானத்தை கொண்டு வர முக்கிய காரணம். ராகுல் காந்தி முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நராவணேயின் புத்தகம் மற்றும் தொழிலதிபர் குறித்த அமெரிக்க விசாரணையில் ஒரு அமைச்சரின் பெயரும் இடம்பெற்றுள்ளது பற்றி ராகுல் காந்தி பேச அனுமதிக்கப்படவில்லை'' என்றார்.
கிரண் ரிஜுஜு குறுக்கீடு
இதையடுத்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு குறுக்கிட்டார். அப்போது அவர், ''இது சபாநாயகர் தொடர்பான விவாதம். எதிர்க்கட்சிகள் மற்ற விவகாரங்கள் பற்றி பேசினால் நாங்களும் அதற்கு பதிலளிப்போம். அப்படி நாங்கள் பதிலளிக்கும்போது குறுக்கிடக் கூடாது. மேலும் விவாதங்களுக்கு சபாநாயகர் அனுமதி அளித்தால் மட்டுமே பேச முடியும்'' என்றார்.
அமித்ஷா பதிலடி
இதற்கு கவுரவ் கோகாய், ''லோக்சபா விவாதங்களை ஆய்வு செய்து பார்த்தால் கிரண் ரிஜுஜு தான் அதிகமுறை குறுக்கீடு செய்வது தெரியும்'' என்றார். இதையடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா எழுந்து, ''கிரண் ரிஜிஜு அதிகம் குறுக்கிடுவது உண்மைதான்.
ஏனென்றால் இவ்வளவு மோசமான எதிர்க்கட்சியை பார்த்ததில்லை'' என்றார். இப்படியாக சபாநாயகர் ஓம்பிர்லா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் அனல் பறக்க லோக்சபாவில் நடந்து வருகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications