நாடு முழுவதும் குறையும் கொரோனா பாதிப்புகள் - 7 மாநிலங்களில் 3 வாரங்களாக யாரும் மரணிக்கவில்லை

டெல்லி உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 3 வாரங்களாக ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 3 வாரங்களாக ஒரு தொற்று கூட ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இதுவரை 63 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைந்திருக்கிறது. தினசரியும் கொரோனா உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்குள்ளாக உள்ளது. கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 78 உயிரிழப்புகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது.

No Covid 19 Deaths Reported from 15 States Last 24 Hours says Centre govt

டெல்லி உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,110 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒரே நாளில் 78 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,43,625 ஆக அதிகரித்துள்ளதாகவும் 1,43,625 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை 10 ஆயிரத்துக்கு மேல் பதிவாகி வந்த நிலையில், இன்று குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ் பூஷன், நாடு முழுவதும் கடந்த 3 வாரங்களாக ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 3 வாரங்களாக ஒரு தொற்று கூட ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

டெல்லி உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். இதுவரை 63 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

மொத்த கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களில் மட்டும் 71 சதவிகிதம் பேர் இருப்பதாகவும் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+