டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேசிய மக்கள் தொகை பதிவேடு.. தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.. அமித் ஷா

Google Oneindia Tamil News

டெல்லி: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் (என். ஆர்.சி), தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் (என்.பி.ஆர்) எந்த தொடர்பும் இல்லை என்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) தொடர்பாக எந்த விதமான விவாதமும் இப்போது தேவையில்லை.என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் பரவியது.

இந்த விவகாரத்தில் அமித்ஷாவின் கருத்துக்கும் பிரதமர் மோடியின் கருத்துடன் மாறுபாடு இருப்பதாக தோன்றியது. இந்த சூழ்நிலையில் தான் அமித்ஷா இந்த கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அமித் ஷா விளக்கம்

அமித் ஷா விளக்கம்

ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பேட்டி அளித்தார் அந்த பேட்டியில் அவர் கூறுகையில், " தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் (npr), தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் (ncr) எந்த தொடர்பும் இல்லை. தேசிய மக்கள் தொகை ஆவணங்கள், குடிமக்கள் பதிவேட்டுக்கு பயன்படுத்தப்படாது.

தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்திற்கு மத்திய அரசு அதிரடி ஒப்புதல்.. ஆவணங்கள் தேவையில்லை என விளக்கம்தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்திற்கு மத்திய அரசு அதிரடி ஒப்புதல்.. ஆவணங்கள் தேவையில்லை என விளக்கம்

என்சிஆர்

என்சிஆர்

என்.பி.ஆர் என்பது எந்தெந்த திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பதற்கான மக்கள் தொகை பதிவு ஆகும். என்.ஆர்.சி மக்கள் எந்த அடிப்படையில் நாட்டின் குடிமக்கள் என்று கேட்பதாகும்.

பயம்

பயம்

தேசிய மக்கள் தொகை பதிவேட்டு தகவல், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு பயன்படுத்தப்படும் என்று நமது முஸ்லிம் சகோதரர்களின் மனதில் எந்த பயமும் இருக்கக்கூடாது. ஆனால் சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள், அவர்கள் அதை செய்யக்கூடாது.

உண்மைதான்

உண்மைதான்

பிரதமர் மோடி சொன்னது சரிதான். தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) தொடர்பாக இதுவரை நாடாளுமன்றத்திலோ அல்லது எந்த விதமான விவாதமும் நடைபெற்றது இல்லை. அமைச்சரவையிலும் விவாதிக்ப்பட்டது இல்லை.

அரசியல்

அரசியல்

எனவே இதை வைத்து கேரளா, மேற்குவங்க மாநில அரசுகள் அரசியல் செய்யக்கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன் பாஜக எதை கூறினாலும் அதற்கு எதிராகவே ஓவைசி பேசுகிறார். கிழக்கில் சூரியன் உதிக்கும் என பாஜக கூறினார். மேற்கில் உதிக்கும் என ஓவைசி கூறுவார்" என்றார்.

English summary
Amit Shah asserted that there was no link between the NRC and the National Population Register (NPR).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X