திடீர் அறிவிப்பு.. இலவச அரிசி, கோதுமை வழங்கும் திட்டம் நவம்பர் 30 வரை மட்டுமே: மத்திய அரசு
இலவச அரிசி, கோதுமை வழங்கும் திட்டம் இந்த மாதத்துடன் நிறுத்தப்படுகிறது
டெல்லி: பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவுப் பொருட்கள் வழங்குவதை, நவம்பவர் 30க்கு பிறகும் நீட்டிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த வருடம் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, உலக மக்கள் விழிபிதுங்கி போனார்கள்.. இந்தியாவையும் தொற்று விட்டுவைக்கவில்லை.
எனவே, நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது...

இலவச கோதுமை
அதை தொடர்ந்து, மார்ச் 26-ம் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது, பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண திட்டத்தை அறிவித்தார்... அதன்படி, "பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா" திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகிறது.

உணவு தானியம்
மானிய விலை உணவு தானியத்துக்குமேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது.. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜுன் வரை மட்டும் இலவச உணவு தானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட இத்திட்டமானது, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டே வந்தது... இந்நிலையில், இலவச உணவு தானியங்கள் வழங்கும் பணி நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பேட்டி
இதுகுறித்து மத்திய உணவுப் பொருட்கள் துறை செயலர் சுதான்ஷு பாண்டே செய்தியாளர்களிடம் சொன்னதாவது: நாடு முழுதும் 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருட்களுடன், கூடுதலாக இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகிறது.. தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருகிறது.. வெளி சந்தையில் உணவுப் பொருட்கள் விற்பனையும் நன்றாக உள்ளது. எனவே, பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவுப் பொருட்கள் வழங்குவதை, நவம்பவர் 30க்கு பிறகும் நீட்டிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை" என்றார்.

உணவு தானியங்கள்
இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதாலும், வெளிச் சந்தையில் உணவு தானியங்கள் விற்பனை அதிகரித்துள்ளதாலும், கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட இலவச அரிசி அல்லது கோதுமை திட்டம், வரும் 30ம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது என்ற உத்தரவு ஏழை மக்களுக்கு ஏமாற்றத்தை தந்து வருகிறது. அதேசமம், இந்த ஒன்றரை வருட காலமாகவே, இலவச அரிசி அல்லது இலவச கோதுமை வழங்கியது, மக்களுக்கு மிகப்பெரிய அளவில் வாழ்வாதாரமாக அமைந்து வருவதை மறுக்க முடியாது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications