இதையெல்லாம் பண்ணவே கூடாது! தேர்வு பயிற்சி மையங்களுக்கு கடிவாளம்.. மத்திய அரசின் புதிய ரூல்ஸ் இதுதான்
டெல்லி: போலியான உத்தரவாதத்துடன் தவறான விளம்பரங்கள் அளிக்கக்கூடாது, 16-வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களை சேர்க்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய விதிகளை பயிற்சி மையங்களுக்கு மத்திய அரசு விதித்துள்ளது.
இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல் நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காகவும் தனியாக நுழைவுத்தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதுபோக ஐ.ஏ.எஸ் ஐ.எபிஸ் முதல் மத்திய அரசின் பெரும்பாலான பணிகள் போட்டித்தேர்வு மூலமே நிரப்பபட்டு வருகின்றன.

மாநில அரசின் கீழ் உள்ள துறையில் பணியாற்றவும் போட்டித்தேர்வுகள் மூலமே தகுதியான தேர்வர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். இப்படி போட்டித்தேர்வுகள் உயர் கல்விக்காகவும் அரசுத்தேர்வுக்காகவும் நடத்தப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் புற்றீசல் போல தேர்வுக்கான பயிற்சி மையங்களும் அதிகரித்து விட்டன. சில பயிற்சி மையங்களில் கொடுக்கப்படும் அதிகப்படியான அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், தான் பயிற்சி மையங்களுக்கு புதிய விதிகளை மத்திய அரசு வகுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதலில் கூறியிருப்பதாவது:- பட்டப்படிப்பு முடிக்காத பயிற்ச்சியாளர்களை பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது. நல்ல மதிப்பெண் கிடைக்கும்.. உத்தரவாதமிக்க ரேங்க் வாங்குவார் என்று பயிற்சி மையத்தில் மாணவர்களை சேர்ப்பதற்கு முன்பாக பெற்றோர்களிடம் தவறான வாக்குறுதிகளை மையங்கள் அளிக்கக்கூடாது.
16-வயதுக்கு கீழான மாணவர்களை பயிற்சி மையத்தில் சேர்க்கக் கூடாது. எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்கு முடித்த பிறகுதான் மாணவர்களை சேர்க்கலாம். தவறாக வழிநடத்தும் வகையில் விளம்பரங்களை வெளியிடக்கூடாது. பயிற்சி மையங்களோ அல்லது மாணவர்கள் பெற்ற முடிவுகளை வைத்து நேரடியாகவோ மறைமுகவோ விளம்பரங்களை வெளியிடக் கூடாது. பயிற்சி மையத்தில் சேரும் மாணவர்களீன் பாதுகாப்பு நலன்களை உறுதி செய்ய வேண்டும்.
சைக்காலஜிக்கல் கவுன்சிலிங் ஆகியவற்றை மாணவர்களின் நலன் கருதி அளிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்தல் அல்லது ஏதேனும் முறைகேட்டில் ஈடுபடுதல் என விதிகளை மீறும் பயிற்சி மையங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது பயிற்சி மையத்தின் அங்கீகாரம் ரத்து செய்யபடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications