ஒரே நாடு, ஒரே தேர்தல்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்! விரைவில் மசோதாவாக தாக்கலாகிறது
டெல்லி: நாடு முழுவதும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வழிவகை செய்யும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஏற்கெனவே மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் இதனை நாடாளுமன்றத்தில் விரிவான மசோதாவாக தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
தற்போது இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு வெவ்வேறு காலக்கட்டங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனை ஒரே காலத்தில் நடத்த வேண்டும் என்பது பாஜகவின் நீண்ட கால கனவு. இதன் மூலம் மத்திய அரசின் அதிகாரம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்கும். மட்டுமல்லாது மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தாலோ அல்லது வேறு காரணங்களால் ஆட்சி நடத்த முடியாத சூழல் உருவாகியிருந்தாலோ மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் வரை காத்திருக்க வேண்டும். அது அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிதான் இருக்கும்.

இது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் என்று அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இதையெல்லாம் பெரியதாக காதில் போட்டுக்கொள்ளவில்லை. இந்த சட்டம் குறித்து கருத்துக்களை பெறுவதற்காகவும், அதை ஆய்வு செய்து தொகுத்து வழங்குவதற்காகவும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவை அமைத்தது. இந்த குழு தனது விவரங்களை மத்திய அரசு முன்னிலையைில் தாக்கல் செய்த நிலையில், அதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது.
இப்போது இருக்கும் ஒரே வேலை, அனைத்து மாநில அரசுகளையும் சமாதானப்படுத்தி, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என்பதுதான். ஏனெனில் இந்த மசோதாவை நிறைவேற்ற அரசியலமைப்பு சட்டத்தில் 6 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த திருத்தங்களை செய்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 3ல் 2 பங்கு பலம் மத்திய அரசுக்கு வேண்டும். தற்போது மத்திய அரசின் கூட்டணி பெரும்பான்மையோடு இருந்தாலும், இந்த பலத்துடன் இல்லை.
அதாவது மக்களவையில் மொத்தம் 545 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களில் 292 பேர் பாஜக கூட்டணியில் உள்ளனர். ஆனால் 3ல் 2 பங்கு பலத்தை பெற 364 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். மாநிலங்களவையில் 245 எம்பிக்களில் 112பேர் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கின்றனர். ஆனால் இது போதாது. 3ல் 2 பங்கு பலம் வேண்டும் எனில் குறைந்தபட்சம் 164 எம்பிக்களின் ஆதரவு தேவை. எனவேதான் அனைத்து மாநில அரசுகளிடமும் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறது.
இந்த திட்டம் விரிவான மசோதாவாக விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இந்த மசோதா அடுத்த வாரம் தாக்கல் ஆக இருக்கிறது. இதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது.
-
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
வன்னி அரசுக்கு வாய் கட்டு? தவெக தலைமை எடுத்த கறார் முடிவு! இடைத்தேர்தல் வேற வருதே! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே!












Click it and Unblock the Notifications