ஒரே நாடு ஒரே தேர்தல்.. நாடாளுமன்ற கூட்டு குழுவில் பிரியங்கா காந்திக்கு இடம்.. இடம்பிடித்த 31 பேர் யார்?
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை பரிசீலனை செய்யும் நாடாளுமன்ற கூட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பிரியங்கா காந்தி, அனுராக் தாகூர், தமிழகத்தை சேர்ந்த சேலம் எம்பி செல்வகணபதி உள்பட லோக்சபாவில் இருந்து 21 பேர், ராஜ்யசபாவில் இருந்து 10 பேர் என்று மொத்தம் 31 பேர் இடம்பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த மத்திய பாஜக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பான மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதன்பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மசோதாவுக்கு ஆதரவாக 269 பேரும், எதிராக 198 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து அந்த மசோதா வெற்றிபெற வில்லை. அதாவது இந்த மசோதவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை வேண்டும். அப்படி பார்த்தால் நேற்று லோக்சபாவில் மொத்தம் 461 பேர் இருந்தனர். இதனால் 307 எம்பிக்களின் ஆதரவு என்பது வேண்டும். ஆனால் 269 எம்பிக்கள் மட்டுமே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மாறாக 198 பேர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இம்மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப பிரதமர் மோடி விரும்புகிறார் என்றார். அதன்பிறகு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக பரிசீலனை செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை பரிசீலனை செய்யும் நாடாளுமன்ற கூட்டு குழுவில் இடம்பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மொத்தம் 31 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் 21 பேர் லோக்சபா எம்பிக்கள். 10 பேர் ராஜ்யசபா எம்பிக்களாக உள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, பாஜகவின் அனுராக் தாகூர் உள்ளிட்டவர்கள் இடம்பிடித்துள்ளனர்.
லோக்சபாவை பொறுத்தவரை எம்பிக்களான பிபி சவுத்ரி, சிஎம் ரமேஷ், பன்சூரி ஸ்வராஜ், பர்சோத்தம்பாய் ரூபாலா, அனுராக் தாகூர், விஷ்ணு தயாள் ராம், பரத்ருஹரி மஹ்தாப், சாம்பிட் பாத்ரா,அனில் பாலுனி, விஷ்ணு தாத் சர்மா, பிரியங்கா காந்தி, மணிஷ் திவாரி, சுக்டியோ பக்வத், தர்மேந்திர யாதவ், கல்யாண் பானர்ஜி, செல்வகணபதி, சுப்ரியா சுலே, ஹர்ஷ் பாலயோகி, ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, சந்தன் சவுகான்,பாலசவுரி வல்லபநேனி உள்ளிட்டவர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் செல்வகணபதி என்பவர் தமிழகத்தின் சேலம் லோக்சபா தொகுதியில் இருந்து திமுக சார்பில் எம்பியாக தேர்வானவர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications