பட்ஜெட் 2019: ஒரே நாடு ஒரே மின்விநியோக திட்டம்.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
Recommended Video
டெல்லி: ஒரே நாடு ஒரே மின்விநியோகம் திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் இன்று பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து அவர் பட்ஜெட் குறித்து உரையாற்றினார்.

அப்போது, 3 லட்சம் கோடி டாலர் எனும் அளவை நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் கடக்கும் என்றார். கடந்த 5 ஆண்டுகளில் 657 கிமீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
பாரத்மாலா மற்றும் சாகர்மாலா ஆகிய திட்டங்கள் மூலம் போக்குவரத்து துறை உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
2030ம் ஆண்டு வரை ரயில்வே கட்டுமானத்துக்கு ரூ.50 லட்சம் கோடி தேவைப்படுகிறது என்ற அவர் தண்டவாளங்கள் அமைத்தல் பயணிகள் ரயில் இயக்கம் மற்றும் சில கட்டுமானப் பணிகள் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு நடைபெறும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மேலும் ஒரே நாடு ஒரே மின்விநியோகம் திட்டம் நடைமுறைபடுத்தப்படும். நாடு முழுவதும் சம அளவில் மின்சாரம் விநியோகம் செய்யம் ஒரே நாடு ஒரே மின்விநியோகம் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சிறு மற்றும் குறு தொழில்களில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதுதான் தற்போது எடுக்கப்பட்டுள்ள முதல் இலக்கு என்றார். ஆண்டுதோறும் 20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications