தமிழ் வாழ்க கோஷங்களுக்கு மத்தியில் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம் என முழங்கிய ஓபிஎஸ் மகன்.. பாராட்டிய பாஜக
Recommended Video
டெல்லி: தமிழ் வாழ்க, தமிழ்நாடு வாழ்க என கோஷங்களுக்கு மத்தியில் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம் என ஓபிஎஸ் மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத்குமார் தெரிவித்தார். இதை மேஜையை தட்டி பாஜக எம்பிக்கள் வரவேற்றனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஏற்கெனவே பிரதமராக இருந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவி ஏற்றுள்ளது. இதையடுத்து, புதிய 17-வது மக்களவைக்கான முதல் கூட்டத்தொடர், நேற்று தொடங்கியது.

நேற்றும், இன்றும் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தமிழக எம்பிக்கள் பதவியேற்றனர். முதலில் புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம் பதவியேற்ற போது தமிழிலேயே பதவியேற்றார்.
இதைத் தொடர்ந்து பதவியேற்ற தமிழக எம்பிக்கள் தமிழில் பதவியேற்றனர். அப்போது பெரும்பாலான எம்பிக்கள் தமிழ் வாழ்க, வாழ்க தமிழ்நாடு என கூறியதற்கு பாஜகவினர் பாரத் மாதா கீ ஜே என கோஷமிட்டனர்.
இந்த நிலையில் அதிமுகவின் ஒரே எம்பியான ஓபி ரவீந்திரநாத் குமார் பதவியேற்க வந்தார். அப்போது அவர் வாழ்க புரட்சித் தலைவர் எம்ஜிஆர், வாழ்க புரட்சித் தலைவி அம்மா, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என கூறினார். உடனே பாஜக எம்பிக்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!











Click it and Unblock the Notifications