கதறிய பாகிஸ்தான்! 300 கிமீ உள்ளே இறங்கி தாக்குதல்! ஆபரேஷன் சிந்தூர் சீக்ரெட்டை பகிர்ந்த ஏர் மார்ஷல்
டெல்லி: பாகிஸ்தானில் இருந்த பல்வேறு தீவிரவாத முகாம்களை ஆப்ரேஷன் சிந்தூரில் இந்தியா அழித்தது. இதற்கிடையே ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாகச் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ள ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், 'ஆபரேஷன் சிந்தூர்' இந்த ஆண்டின் மிக முக்கியமான ராணுவ நடவடிக்கை என்று குறிப்பிட்டார். மேலும், பாகிஸ்தானில் சுமார் 300 கிமீ உள்ளே சென்று தாக்குதல் நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விமானப்படை தினத்தை முன்னிட்டு வரும் அக்டோபர் 8ம் தேதி ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் மிகப் பெரிய அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இதற்கிடையே விமானப்படை தினப் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.. 'ஆபரேஷன் சிந்தூர்' இந்த ஆண்டின் மிக முக்கியமான ராணுவ நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.

300 கிமீ உள்ளே சென்று தாக்குதல்
ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் நீண்ட தூர ஏவுகணைகளே கேம் சேஞ்சராக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் வலுவான வான் பாதுகாப்பு திறன்களையும், ஒருங்கிணைந்த சேவை திட்டமிடலையும் இது வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில், "எங்கள் வான் பாதுகாப்பு கட்டமைப்பு மிகச் சிறப்பாக வேலை செய்தது. அவர்களின் எல்லைக்குள் 300 கி.மீ மேல் உள்ளே சென்று மிகப் பெரிய தாக்குதலை நடத்தினோம். இதுவே கேம்சேஞ்சராக இருந்தது" என்றார்.
எந்த ஆயுதம்
அதேநேரம் 300 கிமீ உள்ளே சென்று பாகிஸ்தானின் எந்தத் தளம் அழிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களை அவர் பகிரவில்லை. மேலும், இந்தியாவிடம் பல்வேறு நீண்ட தூர ஏவுகணைகள் இருக்கும் சூழலில் எந்த வகையான ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்தும் விமானப்படை தளபதி எந்தவொரு தகவலையும் பகிரவில்லை. இருப்பினும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கிய அதிநவீன S-400 ஏவுகணைகளை இந்தியா பயன்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால் அந்தப் பாதுகாப்பு அமைப்புக்கே 300 கிமீ மேல் வரம்பு உள்ளது.
ஆபரேஷன் சிந்தூர், அதன் துல்லியம் மற்றும் தாக்கத்திற்காக வரலாற்றில் இடம்பிடிக்கும் என்று ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் தெரிவித்தார். அவர் மேலும், "ஆபரேஷன் சிந்தூரில் துல்லியமாகத் தாக்க முடிந்தது. குறைந்த இழப்புகளுடன் ஒரே இரவில் அவர்களைக் கலங்கடித்தோம். 1971-க்குப் பிறகு இவ்வளவு பெரிய ராணுவ நடவடிக்கை பகிரங்கமாக அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஒருங்கிணைந்து இந்தத் தாக்குதலை நடத்தினோம்.
வதந்திகளையும் காலி செய்தோம்
ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் ஏராளமான தவறான தகவல்கள் பரவின. ஆனால் நம்முடைய ஊடகங்கள் நமது படைகளுக்குப் பெரிதும் உதவின. வீரர்கள் சண்டையிடும்போது பொதுமக்களின் மன உறுதியைப் பாதிக்காமல் இருப்பதை ஊடகங்கள் உறுதி செய்தன.
அதேநேரம் எதிர்காலப் போர்கள் கடந்த காலப் போர்களைப் போல இருக்காது என்பது எங்களுக்குத் தெரியும். நாம் நமது செயல்பாடுகளில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். எதிர்காலப் போர்களுக்கும் தயாராக இருக்க வேண்டும். அனைத்துப் படைகளுடனும் ஒருங்கிணைந்து செயல்படத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.
தற்சார்பு இந்தியா
எதிர்காலத் திட்டங்களில் தற்சார்பு நோக்கிச் செல்ல முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். LCA Mk1A-க்கான ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. LCA Mk2 உள்ளிட்ட புதிய போர் விமானங்களை டெவலப் செய்து வருகிறோம். பல்வேறு ரடார்கள், அமைப்புகள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு வருகின்றன. நாம் தற்சார்பை நோக்கி நகர்வோம். ஆனால் தேவைப்படும் இடங்களில், வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களையும் சேர்த்தே பயன்படுத்திப் பாதுகாப்பை உறுதி செய்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications