காஷ்மீர் பிரச்சனை பூதாகரம்.. நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அளித்த எதிர்க்கட்சிகள்.. திடீர் ஆலோசனை
Recommended Video
டெல்லி: எதிர்க்கட்சி எம்பிக்கள் ராஜ்யசபாவில் காஷ்மீர் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக படை வீரர்களை குவித்து வருகிறது மத்திய அரசு. இதே காரணத்தை சுட்டிக்காட்டி, அமர்நாத் யாத்திரையையும் கடந்த சில நாள்களுக்கு முன்பு ரத்து செய்தது. மேலும் காஷ்மீரில் நிலவும் பதற்றம் காரணமாக யாத்திரைக்கு வந்தவர்கள், சுற்றுலா பயணிகள், வெளிமாநில மாணவர்கள், வெளிமாநில கிரிக்கெட் வீரர்கள், என அங்கு தங்கியிருக்கும் அனைத்து வெளிமாநிலத்தவரையும் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை இல்லாத ஒரு பதற்றம் நிலவுகிறது. மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வீடுகளில் இருப்பு வைத்து வருகிறார்கள்.காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படலாம் என்றும், மூன்று மாநிலங்களாக காஷ்மீர் பிரிக்கப்படலாம் என்றும் அச்சம் நிலவுகிறது.
இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர் விவாகரத்தில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளது.
காங்கிரஸ் எம்பிக்கள் குலாம் நபி ஆசாத் ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி மற்றும் புவனேஸ்வர் எம்பி கலிதா மற்றும் ஏஐஎம்ஐஎம் எம்பி ஓவைசி, சிபிஐ கட்சி எம்பி பினாய் விஸ்வோம் ஆகியோர் ராஜ்யசபாவில் காஷ்மீர் பிரச்சனை குறித்து இன்று விவாதிக்க ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள்.
இதனிடையே குலாம் நபி ஆசாத் தலைமையில் எதிர்கட்சி எம்பிக்கள் காஷ்மீர் பிரச்சனை குறித்து ராஜ்யசபாவில் பேசுவது குறித்து நாடாளுமன்றத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications