நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கூட தப்பான ஆண்டு.. நோட்டீஸ் ரத்தாக சான்ஸ்! சபாநாயகர் ஓம்பிர்லா ஹேப்பி
டெல்லி: லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்கான நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸை காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 118 எம்பிக்கள் கையெழுத்திட்டு இன்று வழங்கினர். ஆனால் அந்த நோட்டீஸின் 2026 என்பதற்கு பதில் 2025 என்ற ஆண்டு இடம்பெற்றிருந்தது. இதனால் அந்த நோட்டீஸ் ரத்தாக வாய்ப்புள்ளது. இப்படியான சூழலில் தான் எதிர்க்கட்சிகளை பாஜகவினர் ட்ரோல் செய்ய தொடங்கி உள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கூட சரியாக கொடுக்க தெரியவில்லையே என்று வலைதளங்களில் கிண்டல் செய்ய தொடங்கி உள்ளனர்.
நாடாளுமன்றத்தின் லோக்சபா சபாநாயகராக இருப்பவர் ஓம்பிர்லா. இவர் பாஜகவை சேர்ந்தவர். இந்நிலையில் தான் ஓம்பிர்லா நடுநிலைமையாக செயல்படாமல், ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் செயல்படுவதாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

தற்போது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் பற்றி விவாதிக்கவும், சீனா எல்லை மோதல் குறித்து ராணுவ தளபதி நரவானே எழுதிய கருத்துகள் பற்றி விவாதிக்கவும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
ராகுலுக்கு அனுமதி மறுப்பு
இதற்கு லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதிக்கவில்லை. மேலும் ஜனாதிபதி திரெளபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, நரவானே எழுதி வெளிவராத புத்தகத்தில் உள்ள கருத்தை குறிப்பிட்டு பேச தொடங்கியதால் ஆளும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் காந்திக்கு பேச அனுமதி கொடுக்கப்படவில்லை.
நம்பிக்கையில்லா தீர்மானம்
இந்நிலையில் தான் காங்கிரஸ் உள்பட ‛இந்தியா' கூட்டணி கட்சியினர் தொடர்ந்து லோக்சபாவை முடக்கி வருகின்றனர். இதற்கிடையே தான் சபாநாயகர் ஓம்பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் வகையில் இன்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.
காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகோய் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸை லோக்சபா பொதுச்செயலாளரிடம் வழங்கினார். இந்த நோட்டீஸில் மொத்தம் 118 எம்பிக்ககளின் கையெழுத்திட்டுள்ளனர். ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவர் என்பதால் சபை மாண்பு, மரபு கருதி அவர் கையெழுத்திடவில்லை.
2026க்கு பதில் 2025
இதற்கிடையே தான் லோக்சபா எம்பிக்கள் கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸில் ஆண்டு தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2026 என்பதற்கு பதில் 2025 என்று உள்ளது.
அதாவது லோக்சபாவில் கடந்த 2ம் தேதி ராகுல் காந்தியை பேச அனுமதிக்காதது, கடந்த 3ம் தேதி 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது, கடந்த 4ம் தேதி பாஜகவினர் 2 முன்னாள் பிரதமர்கள் பற்றி தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியது உள்ளிட்ட விவரங்களை சுட்டிக்காட்டி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதில் தான் தேதி தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2 February 2026 என்பதற்கு பதில் 2 February 2025, 3 February 2026 என்பதற்கு பதில் 3 February 2025, 4 February 2026 என்பதற்கு பதில் 4 February 2025 என்று 3 இடங்களில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நோட்டீஸ் ரத்தாக வாய்ப்பு
இதனால் இந்த நோட்டீஸ் ரத்தாக வாய்ப்புள்ளது. ஏனென்றால் பொதுவாக நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டால் அதில் உள்ள விவரங்கள், தேதி உள்பட அனைத்து புகார்களும் சரியாக உள்ளதா? என்று முதலில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அந்த வகையில் தற்போது ஆண்டு தவறாக உள்ளது.
இதனால் இந்த நோட்டீஸ் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. இதனால் லோக்சபாவில் சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் வாய்ப்பு எதிர்க்கட்சிகளின் முடிவு தோல்வியடைகிறது. அதேவேளையில் எதிர்க்கட்சி தலைவர்கள் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸ் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
ட்ரோல் செய்யும் பாஜகவினர்
இப்படியான சூழலில் தான் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளை பாஜகவினர் ட்ரோல் செய்ய தொடங்கி உள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கூட சரியாக கொடுக்க தெரியவில்லையே என்று வலைதளங்களில் கிண்டல் செய்ய தொடங்கி உள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications