சூடுபிடிக்கும் அதானி விவகாரம்.. திமிறும் எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றம் டூ விஜய் சவுக் வரை இன்று பேரணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று அதானி விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை கோரியும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாது அமர்வு முழுமையாக முடக்கியதற்கு பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றம் முதல் விஜய் சவுக் வரை மூவர்ண கொடியை ஏந்தி பேரணியாக சென்றனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாது அமர்வு கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கியது. ஆனால் தொடங்கிய நாள் முதல் இரு அவைகளிலும் கடும் கூச்சல் குழுப்பமே ஏற்பட்டது. அதாவது ராகுல் காந்தி லண்டனில் பேசிய விவகாரத்தை குறிப்பிட்டு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது. ஆனால், காங்கிரஸ் மறுப்பு தெரிவித்ததோடு அதானி விவகாரத்தில் மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தது.

அதாவது, அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க்' நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. சுமார் 106 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் உலகின் இரண்டாவது பெரும் பணக்காரராக இருந்த அதானியின் நிறுவனங்கள் பற்றி பல தகவல்களை வெளியிட்டிருந்தது. அதானியின் நிறுவனங்கள் பெரும் கடனில் இருப்பதாகவும், மொரிஷியஸ், கரீபியன் போன்ற வரி ஏய்ப்பு செய்ய சாத்தியமுள்ள நாடுகளிலிருந்து அதானி நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் குறித்தும் விரிவாக கூறியிருந்தது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மொத்தமாக 88 கேள்விகளை இந்நிறுவனம் எழுப்பியிருந்தாகவும் ஆனால் அதானி நிறுவனம் இதில் எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை எனவும் ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டியது. இந்த அறிக்கையையடுத்து அதானிக்கு சொந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை திரும்ப பெற்றுக்கொண்டனர். எனவே அதானி நிறுவனங்களின் பங்குகள் வேகமாக சரிய ஆரமித்தன. அதேபோல அதானியும் உலக பணக்காரர்கள் பட்டியலிலிருந்து வேகமாக சரிய தொடங்கினார். இதில் இரண்டு சிக்கல்கள் இருக்கிறது.

ஒன்று அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்ட எல்ஐசி, எஸ்பிஐ போன்ற பொதுத்துறை நிறுவனங்கின் முதலீடுகள் என்னவாகும் என்கிற கேள்வி. இரண்டாவது, நாட்டின் ஏறத்தாழ அனைத்து துறைகளிலும் அதானியின் 7 நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது. இப்படி இருக்கையில், இந்நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் சரிய தொடங்கினார் இதனை நம்பி இருக்கும் நிறுவனங்களின் நிலை என்னவாகும் என்கிற கேள்வி ஆக இவை இரண்டு குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்னறன.

ஆனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் அமைதி காத்த நிலையில், எதிர்க்கட்சிகள் கடந்த 15ம் தேதி நாடாளுமன்றத்திலிருந்து அமலாக்க துறை அலுவலகம் வரை பேரணியை மேற்கொண்டது. இதனையடுத்துதான் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் தீர்ப்பு வெளியானது, அவர் எம்பி பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது என பல்வேறு சம்பவம்கள் அரங்கேறின.

Opposition parties are holding a rally from Parliament to Vijay Chowk today regarding the Adani issue

இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, சிவசேனா(உத்தவ் தாக்ரே அணி), சிபிஎம், சிபிஐ, ராஷ்டிரிய ஜனதா தளம், விசிக உள்ளிட்ட கட்சியின் எம்பிக்கள் நாடாளுமன்றத்திலிருந்து விஜய் சவுக் வரை பேரணி மேற்கொண்டனர். விஜய் சவுக் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், தடையை மீறி இவர்கள் பேரணி நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+