5 ஜி என சொன்ன நிர்மலா சீதாராமன்.. அப்போ பிஎஸ்என்எல்? கோஷமிட்ட எதிர்க்கட்சிகள்!
டெல்லி: 5 ஜி அலைக்கற்றைக்கான ஏலம் இந்த நிதியாண்டில் தனியார் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களால் விடப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த போது பிஎஸ்என்எல் என எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர்.
Recommended Video
ஆண்டாண்டு காலங்களாக பட்ஜெட் உரை இருக்கும் பெட்டி பளபளப்பாக தோல் பொருளாளான பெட்டியாக இருந்து வந்தது. இந்த மரபை கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தனது முதல் பட்ஜெட்டியிலேயே சிவப்பு நிற துணிப்பையில் இந்திய அரசு சின்னம் பொதித்து மாற்றம் கொண்டு வந்தார்.
இந்த நிலையில் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் துணிப்பையும் விட்டுவிட்டு டேப்லெட்டுக்கு மாறிவிட்டார். டிஜிட்டல் இந்தியாவை முன்னெடுக்கும் விதமாக பட்ஜெட் உரையை பேப்பரில் அச்சிடாமல் டேப்லெட்டில் சாப்ட் காப்பியாக வைத்திருந்தார்.

மேட் இன் இந்தியா
அந்த டேப்லெட்டும் மேட் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார். தனது பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் பேசுகையில் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பங்குகளின் விற்பனை விரைவில் தொடங்கும். ரிசர்வ் வங்கி மூலம் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்.

இணைய பரிவர்த்தனை
டிஜிட்டல் கரன்சி மூலம் இணைய பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும். டிஜிட்டல் பணத்திற்காக புதிய மத்திய வங்கி ஏற்படுத்தப்படும். 25 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி மையங்கள் அமைக்கப்படும். 5 ஜி மொபைல் சேவைகள் வரும் நிதியாண்டில் கொண்டு வரப்படும். இதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும். தொலைத் தொடர்பு துறையில் 5ஜி அடிப்படையில் சேவை வழங்க தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் 2022- 2023 ஆம் ஆண்டுக்குள் அலைக்கற்றை ஏலம் விடப்படும் என்றார்.

பிஎஸ்என்எல்
அப்போது எதிர்க்கட்சிகள் பிஎஸ்என்எல், பிஎஸ்என்எல்லின் நிலை என்ன? பிஎஸ்என்எல்லுக்கு 5 ஜி இல்லையா என கோஷமிட்டனர். அப்போது லேசாக புன்னகைத்தவாறே நிர்மலா சீதாராமன் தனது உரையை தொடர்ந்தார். இந்தியாவில் இதுவரை 5 ஜி அலைக்கற்றை தொடர்பான ஏலம் விடப்படவில்லை.

5ஜி அலைக்கற்றை
இந்த நிலையில் 5 ஜி அலைக்கற்றையை வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறார்கள். 5ஜி அலைக்கற்றை செயல்படத் தொடங்கியவுடன் இணையத்தின் வேகம் ஏற்கெனவே இருக்கும் இணைப்பின் வேகத்தைவிட 20 மடங்கு அதிகமாகவே இருக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications