டெல்லியை ஆக்ரமித்த கொரோனா...56 சதவீதம் பேர் பாதிப்பு
டெல்லி : டெல்லியில் பாதிக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீரோ சர்வேயில் தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக தென்கிழக்கு டெல்லியில் 62.18 சதவீதம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
டில்லியில் 5 வது முறையாக சீரோ சர்வே ஜனவரி 15 முதல் 23 வரை நடத்தப்பட்டுள்ளது. ஏறக்குறைய 28,000 பேரிடம் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தென்கிழக்கு டெல்லியில் 62.18 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

குறைந்த எண்ணிக்கையாக வடக்கு மாவட்டங்களில் 49 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக டெல்லி முழுவதும் 56.13 சதவீதம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன் நடத்தப்பட்ட ஆய்வில் டெல்லியில் 25-26 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பாதிப்பு இருந்ததாக கூறப்பட்டது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8635 பேர் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 8 மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் ஒரு நாளைய கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறி இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தினமும் ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 9000 க்கும் கீழ் குறைந்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications