ப. சிதம்பரம் புத்திசாலி.. அவர் கருப்பு பணத்தை வெள்ளையாக்கியது எப்படி? அமலாக்கத்துறை பரபர வாதம்!
மிக மிக புத்திசாலித்தனமாக ப. சிதம்பரம் முறைகேடு செய்தார் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை வாதம் செய்துள்ளது.
Recommended Video
டெல்லி: மிக மிக புத்திசாலித்தனமாக ப. சிதம்பரம் முறைகேடு செய்தார் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை வாதம் செய்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்ய அமலாக்கத்துறையும் தீவிரமாக முயன்று வருகிறது. இந்த நிலையில் ப. சிதம்பரம் தாக்கல் செய்த பெயில் மற்றும் முன் ஜாமீன் வழக்கு விசாரணை இன்று நடந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர் பானுமதி, போபன்னா ஆகியோர் அமர்வு வழக்கை விசாரித்தது. ப. சிதம்பரம் தரப்பு நேற்று செய்த வாதத்திற்கு இன்று பதில் வழங்கப்பட்டது. ஐஎன்எக்ஸ் வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சார்பாக சொலீஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர் ஆனார்.

என்ன வாதம்
அவர் தனது வாதத்தில், ப. சிதம்பரம் அறிவாளி, சாதூர்யமிக்கவர். புத்திசாலித்தனமாக ப. சிதம்பரம் முறைகேடு செய்தார். சட்டவிரோத பண பரிமாற்றம் என்பது சாதாரண விஷயம் கிடையாது. சட்டவிரோத பண பரிமாற்றம் செய்தால் உலகம் முழுக்க கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. சில நாடுகளில் சட்டவிரோத பண பரிமாற்றம் மிகப்பெரிய கிரிமினல் குற்றமாக பார்க்கடுகிறது.

தவறு
சட்டவிரோத பண பரிமாற்றம் மூலம் செலவு செய்யப்படும் பணமும் முதலீடு செய்து வரும் வருமானமும் கூட முறைகேடானதுதான். நாம் இங்கே மிகவும் புத்திசாலியான மனிதர்களுடன் மோதிக்கொண்டு இருக்கிறோம். ஒரு முட்டாள் இப்படி கருப்பு பணத்தை வெள்ளையாக்க முடியாது.

மிக வேகம்
இதை அவர்கள் ஒரே நாளில் வேகமாக செய்யவில்லை. பொறுமையாக திட்டமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேற்றி இருக்கிறார்கள். இதை அவர்கள் டிஜிட்டல் முறையில் செய்துள்ளனர். டிஜிட்டல் முறையில் அவர்கள் பணத்தை வெள்ளையாக்கி உள்ளனர். அதனால் இந்த குற்றத்திற்கு எந்த விதமான ஆதாரமும் இருக்காது என்று நினைக்கிறார்கள்.

ரேப்
பாலியல் வன்புணர்வு எல்லாம் நேரடியாக செய்யப்படும், அங்கு ஆதாரங்கள் வெளிப்படையாக் தெரியும். ஆதாரங்களை சீலிடப்பட்ட கவரில் மட்டும்தான் அளிக்க முடியும். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் வரை முழு ஆதாரத்தை எங்களால் தாக்கல் செய்ய முடியாது.

முட்டாள்தனம்
அது மிகவும் முட்டாள்தனமாக இருக்கும், இந்த ஆதாரங்கள் எல்லாம் மிகவும் வலிமையானது, அதை அப்படியே வெளியே விட முடியாது. சட்டம் வருவதற்கு முன்பும் மட்டும் அல்ல, சட்டவிரோத பண பரிமாற்றத்திற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்ட பின்பும் கூட இவர்கள் முறைகேடு செய்துள்ளனர்.

ப. சிதம்பரம்
அதனால் இந்த வழக்கில் ப. சிதம்பரத்தை கைது செய்ய எல்லா விதமான உரிமையும் சிபிஐக்கும், அமலாக்கத்துறைக்கும் இருக்கிறது. இதில் ஆதாரங்களை சிதைக்க கூடாது என்பதற்காக நாங்கள் கைது நடவடிக்கையை மேற்கொண்டோம். எங்கள் கைதில் நியாயம் இருக்கிறது.

என்ன அவமானம்
இதில் அவமானம், அவமானம், அவமானம் என்று ப. சிதம்பரம் தரப்பு சொல்லிறது, ஆனால் நான் சொல்கிறேன் இது தற்காப்பு தற்காப்பு தற்காப்பு மட்டும்தான். கேஸ் டயரியை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை நடத்தலாம், இதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது இதுதான் முக்கிய ஆதாரம், அந்த ஆதாரத்தை ப. சிதம்பரம் பார்க்க முடியாது, அதற்கு அனுமதி அளிக்க முடியாது, என்று குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications