தற்காலிக நிம்மதி.. ப.சிதம்பரத்தை நாளை மதியம் வரை கைது செய்ய தடை.. ஈடிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை நாளை மதியம் 12 மணி வரை அமலாக்கத்துறை கைது செய்ய கூடாது உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    P Chidambaram In CBI Arrest Case, Top Court Won't Hear Plea

    டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை நாளை மதியம் 12 மணி வரை அமலாக்கத்துறை கைது செய்ய கூடாது உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கடந்த வாரம் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ப. சிதம்பரத்தை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    இவரை இன்னொரு பக்கம் அமலாக்கத்துறை கைது செய்ய துடித்துக் கொண்டு இருக்கிறது. இதில் ஏற்கனவே ப.சிதம்பரம் முன் ஜாமீன் பெற்றுவிட்டார். அதை இன்று நீட்டிக்க கோரி மனுதாக்கல் செய்தார்.

    இரண்டு மனு

    இரண்டு மனு

    இந்த வழக்கில் ப. சிதம்பரம் தரப்புஇரண்டு மனுக்களை தாக்கல் செய்தது. முதல் மனு சிபிஐ கைதுக்கு எதிரான முன் ஜாமீன் மனு. ஆனால் சிபிஐ ஏற்கனவே ப. சிதம்பரத்தை கைது செய்துவிட்டதால் அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் அமலாக்கத்துறைக்கு எதிரான முன் ஜாமீன் நீட்டிப்பு மனு மீது மட்டும் உச்ச நீதிமன்றம் விசாரணை செய்தது.

    கைது

    கைது

    அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை கைது செய்ய அனுமதிக்க கூடாது, ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் முன் ஜமீனை நீட்டிக்க வேண்டும் என்று இந்த மனுவில் ப. சிதம்பரம் தரப்பு கோரிக்கை வைத்தது. சிபிஐக்கு எதிரான முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இந்த மனு மீது விசாரணை நடந்தது.

    என்ன ஆதாரம்

    என்ன ஆதாரம்

    இதில் ப. சிதம்பரம் சார்பாக வாதம் செய்த கபில் சிபல், அமலாக்கத்துறை ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் சீலிட்டு சமர்ப்பித்துள்ளது. சீலிட்ட ஆதாரத்திற்கு எதிராக நான் எப்படி வாதாட முடியும்.என்ன ஆதாரம் என்றே தெரியாமல் நான் எப்படி வாதாட முடியும்.

    பெயில்

    பெயில்

    ப. சிதம்பரத்தை தவிர இந்த வழக்கில் எல்லோரும் பெயிலில் இருக்கிறார்கள். சிலருக்கு அவர்கள் கேட்காமலே பெயில் வழங்கப்பட்டுள்ளது .ப. சிதம்பரத்திற்கு தெரியாமல் பல ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். எந்த வழக்கிலும் இதற்கு முன் இப்படி நடந்தது கிடையாது.

    பெரிய அவமானம்

    பெரிய அவமானம்

    ப. சிதம்பரத்தை அவமானப்படுத்த வேண்டும் என்று கைது செய்துள்ளனர்.அவரின் கைது நடவடிக்கை நிகழ்ந்ததே அதை மனதில் வைத்துதான் - கபில் சிபல் ப. சிதம்பரம் எப்போதும் விசாரணைக்கு சரியாக ஆஜராகி உள்ளார், என்று கூறினார்.

    என்ன விறுவிறுப்பு

    என்ன விறுவிறுப்பு

    இதற்கு சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறினார். இந்த வழக்கில் விறுவிறுப்பாக வாதம் சென்றது.

    என்ன உத்தரவு

    என்ன உத்தரவு

    இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை நாளை மதியம் 12 மணி வரை அமலாக்கத்துறை கைது செய்ய கூடாது உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்றோடு தடை முடியும் நிலையில் நாளை மதியம் வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடக்கும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி மற்றும் ஏஎஸ் போபண்ணா தெரிவித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+