74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்
Recommended Video
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் 74ஆவது பிறந்தநாள் விழாவின் போது அவர் திகார் சிறையில் இருப்பது அவரது தொண்டர்கள், குடும்பத்தினரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், இன்னாள் மாநிலங்களவை எம்பியுமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார். அவர் இந்த வழக்கில் கடந்த ஆண்டு 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
பின்னர் 15 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்ட ப.சிதம்பரம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அது போல் ஏர்செல் மேக்சிஸ் வழக்கிலும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

முன்ஜாமீன்
இந்த இருவழக்குகளில் முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ஷைனி, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அமலாக்கத் துறையும் சிபிஐயும் அவர்களுக்கு முன்ஜாமீன்தரக் கூடாது என கோரிய நிலையில் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

ப.சிதம்பரம் வழக்கு
இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமீன் தர மறுத்த நீதிபதி ஷைனி, அவரை 14 நாட்களுக்கு திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தனது வயதையும் உடல்நலத்தையும் கருத்தில் கொண்டு தன்னை சிறைக்கு அனுப்ப வேண்டாம் என ப.சி. கோரியும் அவரது பேச்சு எடுபடவில்லை.

ஜாமீன் இல்லை
இதையடுத்து அவர் அங்கு அடைக்கப்பட்டார். அவர் அடைக்கப்பட்ட நாளே சிதம்பரத்தின் 74ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அவரை ஜாமீனில் எடுக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்பினர். எனினும் அது நடக்கவில்லை.

தொண்டர்கள் வாழ்த்து
இந்த நிலையில் இன்றைய தினம் அவருக்கு 74ஆவது பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்டரிலும் பேஸ்புக்கிலும் ஏராளமானோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். வழக்கமாக ஒவ்வொரு பிறந்தநாளின் போது அவரது தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை அது முடியாமல் போயிற்று. அவரது நீதிமன்றக் காவல் 19-ஆம் தேதியுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications