டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெங்காய விலையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு.. திகாரில் இருந்து வந்தவுடன் ப.சிதம்பரம் அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    ப.சிதம்பரம் வெங்காய விலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் - வீடியோ

    டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ப.சிதம்பரம் வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அதிரடி காட்டினார்.

    வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இதை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 150 முதல் 200 வரை விற்பனையாகிறது.

    சின்ன வெங்காயத்தின் விலையும் 130 முதல் 200 வரை விற்பனையாகிறது. பொங்கல் பண்டிகை வரை இதே நிலை நீடிக்கலாம் என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

    இன்று ஆர்ப்பாட்டம்

    இன்று ஆர்ப்பாட்டம்

    இதனால் நடுத்தர, ஏழை எளிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் ஹோட்டல்களில் உணவின் விலையும் உயர்ந்துவிட்டது. இந்த நிலையில் வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.

    திகாரிலிருந்து வெளி வந்த ப.சிதம்பரம்.. தொண்டர்கள் செம வரவேற்பு.. தமிழக தலைவர்களைக் காணலேயே!திகாரிலிருந்து வெளி வந்த ப.சிதம்பரம்.. தொண்டர்கள் செம வரவேற்பு.. தமிழக தலைவர்களைக் காணலேயே!

    ப சிதம்பரம் பங்கேற்பு

    ப சிதம்பரம் பங்கேற்பு

    இந்த ஆர்ப்பாட்டத்தில் திகார் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த ப. சிதம்பரம் கலந்து கொண்டார். அவர் கண்டன பதாகைகளையும் அவர் கையில் வைத்திருந்தார். அதோடு இன்று கூட்டத்தொடரில் நடைபெறும் விவாதங்களிலும் அவர் கலந்து கொள்கிறார்.

    திகார் சிறை

    திகார் சிறை

    இதனால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ப. சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து சிபிஐ காவலில் இருந்த அவர் செப்டம்பர் 5-ஆம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    நிபந்தனை ஜாமீன்

    பின்னர் சிபிஐ வழக்கில் சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் அவர் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனால் அவர் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் 106 நாட்களுக்கு பிறகு அவருக்கு நேற்றைய தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Congress leaders, including P Chidambaram protest in Parliament premises over onion prices hike.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X