சவூதி பயணம் பாதியில் கேன்சல்.. அவசரமாக நாடு திரும்பிய மோடி.. பயங்கரவாதிகளுக்கு பதிலடி தர ஆலோசனை
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் 27 அப்பாவி பொதுமக்கள் பலியான நிலையில் சவூதி அரேபிய பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவசரமாக இன்று காலையில் நாடு திரும்பினார். இன்று அவர் மத்திய அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையை எடுக்க உள்ளார். இதன் ஒருபகுதியாக விமான நிலையத்தில் இறங்கியதுமே வெளியுறவுத்துறை அமைச்சர ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டவர்களுடன் மோடி ஆலோசித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்துக்குள் நேற்று நுழைந்த 4 பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கியால் சுட்டு சுற்றுலா பயணிகளை கொன்றனர். 27 பேர் பலியாகினர். தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 12 பேர் வரை காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி மொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்புதான் பொறுப்பு ஏற்றுள்ளது.
இந்த தாக்குதல் என்பது பிரதமர் மோடி நம் நாட்டில் இல்லாதபோது நடந்தது. பிரதமர் மோடி சவூதி அரேபியாவுக்கு நேற்று காலையில் புறப்பட்டு சென்றார். இருநாடுகள் இடையேயான பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி சவூதி அரேபியாவுக்கு சென்றார். இந்த சமயத்தில் தான் 4 பயங்கரவாதிகள் பஹல்கம் சுற்றுலா தலத்தில் நுழைந்து கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தி 27 பேரை கொன்றுள்ளனர்.
இதுபற்றி அறிந்தவுடன் பிரதமர் மோடி பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். கோழைத்தனமான தாக்குதல் என்று விமர்சனம் செய்தார். அதுமட்டுமின்றி சம்பவம் குறித்து தொடர்ந்து சவூதி அரேபியாவில் இருந்து உடனடியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். பின்னர் பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் உடனடியாக ஜம்மு காஷ்மீர் விரைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
தற்போது அமித்ஷா ஸ்ரீநகரில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் சவூதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்து கொண்டு பிரதமர் மோடி இன்று காலை விமானத்தில் டெல்லி திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் இறங்கியதும் பிரதமர் மோடி வீட்டுக்கு செல்லவில்லை. மாறாக டெல்லி விமான நிலையத்திலேயே முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டவர்களுடன் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டார். ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலைமை, மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசித்தார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு புறப்பட்டார்.
இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு பிறகு அடுத்தடுத்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளார். அதன்படி இன்று அவர் மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் நிலைமை மற்றும் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது பற்றி விவாதிக்க உள்ளார். அதேபோல் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அதனை பாதியில் கைவிட்டு நாடு திரும்புகிறார். இதனால் நம் நாட்டு படை வீரர்கள் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது உறுதியாகி உள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications